வாராவாரம் வாசலில் தவறாமல் இந்த 1 விஷயத்தை செய்தால் வராத நிம்மதியும் தானாய் உங்க குடும்பத்தை தேடி வருமே! நிம்மதியான இல்லறத்திற்கு எளிய பரிகாரம்!

lakshmi-door-vasal
- Advertisement -

வாராவாரம் நாம் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்வது போல வாசலில் மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்வதும் முறையாகும். இப்படி செய்யும் பொழுது இந்த ஒரு விஷயத்தையும் சேர்த்து செய்வதன் மூலம் குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியான ஒரு விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

வாரம் தோறும் பூஜை அறையை மட்டும் சுத்தம் செய்து பூஜை செய்வதில் பலன் இல்லை! நம்முடைய வீட்டில் வசிக்கக்கூடிய குலதெய்வம் நிலை வாசலில் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் நிலை வாசலை நன்கு துடைத்து சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் அதற்கும் இட்டு வழிபட்டு வருகின்றோம். இப்படி வழிபடும் பொழுது வாசலில் பசுஞ்சாணம் தெளிப்பது அக்காலத்தில் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யும்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் அறிவியல் பூர்வமாக கிருமி நாசினியாகவும் இவை செயல்பட்டன. ஆனால் இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு இவை எல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் பசுஞ்சாணம் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அதற்கு பதிலாக கொஞ்சம் மஞ்சள் கலந்து தண்ணீரை வீட்டு வாசலில் தெளித்து சுத்தம் செய்யுங்கள். பின்னர் ஒரு சிறிய அளவிலான கோலத்தை பச்சரிசி மாவினால் போடுங்கள்.

பச்சரிசியில் போடப்படும் கோலம் தோஷங்களையும், திருஷ்டிகளையும் அகற்றும். அது மட்டும் அல்லாது நேர்மறை எண்ணங்களை, நேர்மறை சக்திகளை அதிகரிக்க செய்யும். இதனால் வீட்டில் நெகட்டிவ் வைப்ரேஷன் குறையும், நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைப்பதோடு மட்டுமல்லாமல் இது போல மஞ்சள் தண்ணீரை தெளித்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டு வையுங்கள் அருகில் வாசலில் வலது புறத்தில் உருளி ஒன்றை சிறிய அளவில் வைத்து அதில் தண்ணீரை நிரப்பி வாசனை மிகுந்த பூக்களையும், இறை சக்தியை அதிகரிக்க கூடிய பொருட்களையும் போட்டு வைக்கலாம்.

- Advertisement -

பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பட்டை, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தி வாசனை மிகுந்த உருளியை தயார் செய்யலாம். இந்த உருளியில் இருக்கும் தண்ணீரில் இருந்து எவ்வளவு வாசம் நம் வீட்டிற்குள் நுழைகிறதோ, அந்த அளவிற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெரிய பெரிய பாத்திரங்களில் தான் வைத்து செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை! நம்மிடம் இருக்கும் சிறிய அளவிலான பாத்திரத்தை வைத்து இது போல் செய்து வைத்தாலே போதுமானது.

இதையும் படிக்கலாமே:
தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம் கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம் கரைந்து போகும்.

அது போல வாசலில் செருப்பு, துடைப்பம் போன்ற தரித்திரம் தரும் பொருட்களை போட்டு வைக்கக் கூடாது. அவை இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும். சிலருக்கு வாசல் எதிரே வேறொரு வீடு அமைந்திருக்கும். அவர்களுடைய வீட்டு வாசலில் இருக்கக்கூடிய இந்த பொருட்கள் நம்மை பாதிக்குமா? என்கிற சந்தேகம் இருக்கும். அப்படி எதுவும் பாதிக்காது, நம்முடைய வீட்டை நாம் சுத்தமாகவும், பக்தியுடனும் வைத்திருந்தால் போதும், மகாலட்சுமி நம் இல்லத்தில் மகிழ்ச்சியாக குடியேறுவாள்.

- Advertisement -