தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம் கரைந்து போகும்.

pillaiyar
- Advertisement -

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும் நல்ல விதமாக இந்த பூமியில் பிறப்பெடுத்து, சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து விட்டு முக்தி அடையவும் செய்கிறார்கள். ஆகவே மனிதப்பிறவி பாவப்பிறவு என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பதான் கடவுள் நமக்கான கஷ்ட நஷ்டங்களையும் சந்தோஷத்தையும் கொடுக்கின்றான். அப்படிப்பட்ட பாவங்களை கழிப்பதற்கும், புண்ணியத்தை தேடுவதற்கும் நம் ஆன்மீகத்தில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பாவத்தை கழிக்க செல்ல வேண்டிய கோவில்கள்:
எல்லா கோவில்களுக்குமே சக்தி உண்டு தான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. எந்த ஒரு சின்ன கோவிலிலும் இறைசக்தி நிச்சயம் நிறைந்து தான் இருக்கும். ஆனாலும் வெட்டவெளியில் ஆத்தங்கரையில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சக்தி கொஞ்சம் கூடுதலாக இருக்கும். காரணம் பஞ்சபூதங்களின் சக்தியும் அந்த இடத்தில் நேரடியாக இருப்பதுதான்.

- Advertisement -

நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு போன்ற பஞ்சபூதங்களின் அடக்கம் தான் ஆற்றங்கரையில் இருக்கக்கூடிய கோவில்கள். பெரும்பாலும் ஆற்றங்கரையில் விநாயகர் கோவில் இருக்கும். சும்மாவே ஆத்தங்கரைக்கு போய் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும். ஆற்றங்கரையில் குளிக்க வேண்டும். ஆற்றங்கரையில் கால்நனைக்க வேண்டும். ஆற்றங்கரையில் ஓடும் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டால் நல்லது என்று சொன்னால் நாம் கேட்போமா.

அதனால்தான், அந்த இடத்தில் விநாயகரை வைத்து அவரை பூஜித்தால் நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். சில இடங்களில் கன்னிமார் சிலையை ஆத்தங் கரையில் வைத்து வழிபடுவார்கள். சில இடங்களில் குலதெய்வம் கோவில் கூட ஆற்றங்கரை ஓரமாக இருக்கும். சில இடங்களில் காவல் தெய்வங்கள் ஆற்றங்கரை ஓரம் இருக்கும். சில அம்மன் கோவில்கள் கூட ஆற்றங்கரையில் இருக்கும்.

- Advertisement -

எந்த கோவிலாக இருந்தாலும் சரி, அடிக்கடி அந்த ஆற்றங்கரை ஓரம் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தி அந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அந்த இயற்கை சூழலில் நம்முடைய மனதிற்கு நிம்மதி கிடைப்பதோடு சேர்த்து, அந்த ஆற்றங்கரையில் கால் நனைத்து, அந்த தண்ணீரை எடுத்து தலைக்கு தெளிக்கலாம். முடிந்தால் ஆற்றங்கரையில் தண்ணீரில் குளித்துவிட்டு இறைவழிபாடு செய்வது என்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: குருவின் அருள் பெற்ற இந்த பொருளை வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டி தொங்க விட்டால், வீட்டில் தங்கத்தை மூட்டை மூட்டையாக வாங்கி குவிக்க கூடிய அற்புதமான யோகத்தை பெறலாம்.

உங்களுடைய கர்ம வினைகள் எல்லாம் அந்த ஆற்றோடு தண்ணீரோடு ஓடிவிடும். உங்களை பிடித்த பாவங்கள் எல்லாம் கரைந்து ஓடும் என்பதற்காக இந்த ஒரு வழிபாட்டை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆற்றங்கரைக்கு செல்லும்போது ஆற்றங்கரையில் இறங்கும்போது அதிக கவனம் தேவை. பாதுகாப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இப்படிப்பட்ட வழிபாடுகளை நேரம் கிடைக்கும் போது செய்து வாருங்கள். நிச்சயமாக பாவம் தீரும். புண்ணியம் சேரும் என்ற இந்த கருத்துடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -