இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளும், பிரச்சினைகளும் வரப்போகிறது என்று அர்த்தம் கொஞ்சம் உஷாரா இருங்க.

sad
- Advertisement -

நம்முடைய வீட்டில் நிம்மதி நிலைகுலைந்து போவதற்கு முதல் காரணம், நம்முடைய வீட்டில் தெய்வ கடாட்சம் குறைந்து போவது தான். தெய்வ கடாட்சம் வீட்டில் குறையும்படி நாம் எந்த ஒரு தவறையும் செய்ய கூடாது. குறிப்பாக வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக் கூடாது. வீட்டில் எப்போதும் தெய்வீகமான வாசம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். சரி எந்தெந்த அறிகுறிகளின் மூலம் நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்? அப்படி சண்டை சச்சரவுகள் காண அறிகுறிகள் தென்பட்டால், வரக்கூடிய சண்டை சச்சரவுகளைத் தடுக்க முன்கூட்டியே என்ன பரிகாரம் செய்வது என்பதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

எந்த ஒரு வீட்டில் திடீரென நிலைவாசல் கதவில் பழுது ஏற்படுகின்றதோ அந்த வீட்டில் எதிர்பாராத கஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராமல் நிலை வாசல் கதவில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்து விடுங்கள். அடுத்தபடியாக நிலை வாசல் மர சட்டத்தில் எறும்பு புற்று, கரையான் புற்று வரவே கூடாது. சில வீடுகளில் நிலைவாசல் படியை துளைத்து, வாசல் காலுக்கு பக்கத்திலேயே எறும்புகள் ஓட்டையைப் போட்டு புற்று வைத்துவிடும். இப்படி இருந்தால் அந்த புற்றை உடனடியாக அகற்றி அந்த நிலைவாசல் படியிலிருக்கும் துவாரங்களை பசை போட்டு அடைத்து விட வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்குள் சிவப்பு நிற கொஞ்சம் பெரிய எறும்புகள் அதிகமாக இருக்கவே கூடாது. அதாவது சாரைசாரையாக இந்த எறும்புகள் வீட்டிற்குள் வர தொடங்கினால், நம்முடைய வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்குள் உள்ள பொருட்களை கரையான் அரிப்பு இருக்கவே கூடாது. அது வீட்டிற்கு ஆகாத ஒன்றாகும்.

சில பேர் வீடுகளில் மூட்டை பூச்சி பிரச்சனையும் அதிகமாக இருக்கும். மூட்டைப்பூச்சிகள் வீட்டில் அதிகமாக இருந்தாலும் அது வீட்டிற்கு தரித்திரத்தை கொடுக்கும். அதையும் உடனடியாக சுத்தம் செய்வதே நல்லது. மேல் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் முதல் மூலக்காரணம் வீடு சுத்தம் இல்லாமல் இருப்பது தான். எந்த வீடு அசுத்தமாக இருக்கின்றதோ அந்த வீட்டிற்குள் வறுமை, தரித்திரம் பிடித்து கொள்ளத்தான் செய்யும். ஆக மேல் சொன்ன இந்த விஷயங்களில் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் சண்டை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டது. முதலில் என்ன செய்வது. வீட்டை முழுவதுமாக தலைகீழாகப் புரட்டிப் போட்டு சுத்தம் செய்யுங்கள். முடிந்தால் புதியதாக சுண்ணாம்பு அடித்து விடுங்கள். வீட்டிற்குள் மணக்க மணக்க தூபம் போட வேண்டும். மருதாணி விதை, வெண் குங்கிலியம், வாசனை நிறைந்த சாம்பிராணி இவைகளை போட்டு அந்தப் புகையை வீடு முழுவதும் மூலைமுடுக்குகளில் காண்பித்து விடுங்கள்.

தினமும் விளக்கு ஏற்றி பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். தினமும் குலதெய்வத்திடம் ‘என்னுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. என்னுடைய குடும்பத்தை நீ தான் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் வையுங்கள்’ முடிந்தால் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

ஒரு சிறிய தட்டில் ஜவ்வாது பச்சை கற்பூரம் இந்த இரண்டு பொருட்களையும் கலந்து திறந்தபடியே பூஜையறையில் வைத்து விடுங்கள். இந்த வாசம் உங்கள் வீடு முழுக்க நிரம்பி இருக்கும். இந்த வாதத்திற்கு தெய்வ கடாட்சம் வீட்டில் நிரந்தரமாக தங்கும். வீட்டை கெட்ட சக்தி நெருங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால் நீங்களும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -