இந்தத் தண்ணீரை ஒரு சொட்டு உங்களுடைய வீட்டில் தெளித்தால் கூட போதும்! உங்கள் வீட்டு கஷ்டங்கள் அனைத்தும், ஒரு நொடிப் பொழுதில் காணாமலே போய்விடும்.

theertham

வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டத்தை ஒரு நொடிப்பொழுதில் காணாமல் போக வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த, மிக மிக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் பிரச்சனை எப்போது தொடங்கும்? அதாவது ‘பண கஷ்டம், வீட்டில் இருப்பவர்கள் சண்டை போடுவது, இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிடுவோம்.’ பொதுவாக சந்தோஷமாக இருக்க கூடிய ஒரு வீட்டில், கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். நமக்கு தெரிந்தவர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ நம் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

theertham

சிலபேர் சந்தோஷமாக வந்து நம்மைப் பார்த்துவிட்டு, அவர்களுடைய சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டு சென்றுவிடுவார்கள். இதன் மூலம் பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால், கஷ்டப்படும் சிலர் நம் வீட்டிற்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களுடைய கஷ்டத்தை எண்ணி, நம்முடைய சந்தோஷத்தை பார்க்கும் போது, அவர்களுக்குள் சிறிய மனவருத்தம் ஏற்படத்தான் செய்யும்.

இதையும் தாண்டி சிலர் தங்களுடைய மனக் கஷ்டத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நம் வீட்டிற்கு வருவார்கள். மகிழ்ச்சியாக இருக்கும் நம்முடைய மனநிலை, அவர்களுடைய கஷ்டத்தை கேட்டு சோகத்தில் மூழ்கி விடும். நம்முடைய வீட்டிற்கும் உயிர் உண்டு. அவர்களுடைய கஷ்டங்களை வெளியில் சொல்லும் போது, நம்முடைய வீடும் செவிகொடுத்து அந்தக் கஷ்டங்களை கேட்டு கொண்டு தான் இருக்கும். அவர்கள் தங்களுடைய கஷ்டங்களை சொல்லி விட்டு சென்ற பின்பு, அந்த எதிர்மறை ஆற்றல் நம் வீட்டில் நிச்சயமாக பிரதிபலிக்கும்.

family fight

இதனால் கூட சந்தோஷமாக இருந்த நம்முடைய வீட்டில் சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்காக அடுத்தவர்களுடைய கஷ்டத்தை நாம் கேட்க கூடாது என்று சொல்ல வரவில்லை. அடுத்தவர்களுடைய பிரச்சினையின் மூலம், நம்முடைய வீட்டில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத் தான் இந்த பதிவு.

- Advertisement -

இப்படி யாராவது உங்களுடைய வீட்டிற்கு வந்து சென்ற பின்பு, அவர்களுடைய கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து சென்ற பின்பு, உங்களுடைய வீட்டில் பிரச்சனை வந்து விட்டது என்றாலும், அல்லது பிரச்சினை வராமல் தடுப்பதற்கும், இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து விட்டு தூங்கச் செல்லுங்கள். அந்த வாரம் முழுவதும் உங்கள் வீடு எதிர்கொண்ட எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் இந்த பரிகாரம் அழித்துவிடும்.

ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, இரண்டு ஏலக்காய்களை இடித்துப் போட்டு, அந்த தண்ணீரை 10 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடலாம். இப்படி செய்யும் பட்சத்தில், உங்கள் வீட்டை பிடித்த எதிர்மறை ஆற்றல்கள், உங்கள் வீட்டில் நீங்கள் பேசிய எதிர்மறை வார்த்தைகள், அடுத்தவர்கள் வந்து உங்களுடைய வீட்டில் பேசிய எதிர்மறை வார்த்தைகள் இவை அனைத்துக்குமே உயிர் இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.அதன்பின்பு உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டியால் கஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது.

manjal

உங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் சரி, அல்லது யாரும் வரவில்லை என்றாலும் சரி, வீட்டில் பட்ட கண் திருஷ்டியை நீக்குவதற்கும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். வாரம் முழுவதும் உங்களை பிடித்த கண்திருஷ்டியை, வார இறுதியில் நீங்கள் நீக்கி விட்டால், திருஷ்டியின் மூலம் உங்களுடைய குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். பரிகாரம் சிறியது தான். ஆனால் நிச்சயம் பலன் பெரியதாக கிடைக்கும்.