குபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்

0
2036
gupera bommai
- விளம்பரம் -

சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். சரி, இந்த பொம்மையை எங்கு வைப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

kupera bommai

பொதுவாக ஒரு வீட்டின் வடகிழக்கு திசையே அதிஷ்டம் தரும் திசையாக கருதப்படுகிறது. ஆகையால் எப்போதும் அழகிய சிரிப்புடன் காணப்படும் இந்த குபேர பொம்மையை வடகிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிப்பதோடு செல்வமும் பெருகும். அதோடு வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் பெருகும். இதனால் மனக்கஷ்டங்களும் தீரும்.

Advertisement

இந்த பொம்மையை எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அனால் அந்த அறையின் வடகிழக்கு திசையில் வைப்பது சிறந்தது.

சாதாரண ஒரு பொம்மைக்கு எப்படி இவளவு சக்தி என்றால் அதற்கு முழு காரணம் அந்த பொம்மையின் வடிவமைப்பே. எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் இந்த பொம்மையை நாம் பார்க்கும்போது நமக்கு தெரியாமலே நமக்குள் ஒரு ஆனந்தம் வரும். இதனால் மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் குறைந்தால் மற்றவை எல்லாம் சரியாக நடக்கும். இதுவே இந்த பொம்மையில் உள்ள அற்புத சக்தியின் ரகசியம்.

Advertisement