பெண்கள் வீட்டில் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் கூட, எதிர்காலத்தில் பல கஷ்டங்கள் வருவதற்கு காரணமாக இருக்கும். அது என்னென்ன தவறுகள் என்று நீங்களும் தெரிஞ்சி வெச்சுக்கோங்க!

pooja1

யாரும் தவறை, தவறு என்று தெரிந்தே செய்வது கிடையாது. தெரியாமல் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகளும் நமக்கு பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வரிசையில் நம்முடைய வீட்டில் நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டின் பெரும்பான்மையான பொறுப்புகளை பெண்கள் கவனித்துக் கொள்வதால், இந்த விஷயங்களில் பெண்கள் கொஞ்சம் அதிகமான அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளில் அக்கறை காட்டும் ஆண்களும் இந்த விஷயங்களை பின்பற்றலாம். தவறொன்றும் கிடையாது.

flower-poo

சரி, அந்த தவறுகள் என்னென்ன? குறிப்பிட்ட இந்த தகவல்களை எல்லாம், உங்கள் வீட்டில் நீங்கள் செய்கிறீர்களா? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். முதல் தவறு, உங்களுடைய வீட்டில் தலையில் சூடிக் கொள்வதற்காகவும், சுவாமி படங்களுக்கு வைப்பதற்காகவும் பூக்களை வாங்கி அப்படியே வெளியில் வைத்தும் வாட விடக்கூடாது. ஃப்ரிட்ஜில் வைத்தும் வாட விடக்கூடாது.

வாங்கிய பூக்களை சுவாமி படங்களுக்கு போட்டுவிட்டு, வீட்டுப் பெண்களும் அதை தங்களுடைய தலைகளில் சூட்டிக் கொள்ள வேண்டும். தலையில் சூடாமைல், சுவாமி படங்களுக்கும் வைக்காமல், மலரும் பூக்களை, நம் வீட்டில் வாங்கி வைத்து கவரில் போட்டு தெரியாமல் கூட அழுக விட்டு, காய விட்டு விடக்கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

malli-poo

இரண்டாவது தவறு. சுவாமிக்கு சில வீடுகளில் தினம்தோறும் நிவேதனமாக கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது பேரீச்சம்பழம் முந்திரி பருப்பு அல்லது பால் இப்படிப்பட்ட பொருட்களை பிரசாதமாக வைக்கும் பழக்கம் இருக்கும். அந்த பிரசாதத்தை உங்களது பூஜை முடிந்தவுடன் 5 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டு விட வேண்டுமே தவிர, பூஜை அறையிலேயே விட்டு விட்டு அந்த பிரசாதத்தை எறும்பு மொய்க்க விட்டு, வீணடிக்க கூடாது.

- Advertisement -

இந்த இடத்தில் கட்டாயமாக ஒரு கேள்வி எழும்? ‘எறும்புகளுக்கு தானமாகக் கொடுப்பது தவறு ஒன்றும் கிடையாதே’ என்று! இருப்பினும் இறைவனுக்காக படைக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட பிரசாதத்தை பூஜை அறையிலேயே வைத்து அப்படி வீணாக்காமல் அதற்கென்று ஒரு மதிப்பு கொடுத்து நாம் எடுத்து சாப்பிடுவதுதான் நல்லது.

pooja-room0

மூன்றாவதாக உங்கள் சமையலறையில் காய்கறிகள், பழவகைகள், மளிகை பொருட்கள், மற்ற உணவுப் பொருட்கள் இவைகளை தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்து அதை சரியான முறையில் பராமரித்து உங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதில் தவறொன்றும் கிடையாது. எல்லா பொருட்களையும் அதிகமாக வாங்கி, வீட்டில் வைத்துக் கொண்டு, பூச்சி பிடித்து, வண்டு பிடித்து, பழங்கள் அழுகி, அப்படியே குப்பைத்தொட்டியில் எடுத்துப் போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.

provision

உங்களுக்கு தேவையான பொருட்களை முடிந்தவரை, கெட்டுப் போகக்கூடிய பொருட்களை அப்பவே வாங்கி, அப்பவே பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி பிரிட்ஜில் வைத்து, அந்த மூலையில் வைத்து இந்த மூலையில் வைத்து அது உங்களுடைய வீட்டில் கெட்டுப் போய் குப்பை தொட்டிக்கு போக கூடாது. இதுவும் தரித்திரத்தை கட்டாயம் உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.

thambulam

பூஜை அறையில் நிவேதத்திற்காக வைத்த வெற்றிலை பாக்கு பூ பழம் இவைகளை பூஜை அறையிலேயே அப்படியே விட்டு விட்டு, வாட விடக்கூடாது. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள் அந்த வெற்றிலையை பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்துவிடலாம். வாடுவதற்கு முன்பாகவே பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடுங்கள்.

poojai arai

வெற்றிலை பாக்கில் வைக்கும் பூவை அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தலையில் சூட்டிக் கொள்ளுங்கள். பெரும்பாலும் நிறைய பேர் வீட்டில் இந்த தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது. முடிந்தவரை இந்த தவறுகளை படிப்படியாக திருத்திக் கொள்ளப் பாருங்கள். உங்களுக்கும் உங்களுக்கு அடுத்த வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயங்களில், மேல் சொல்லப்பட்ட இந்த சில விஷயங்களும் அடங்கும் என்ற கருத்தினை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் இருக்கக்கூடாத 5 பொருட்கள் என்ன? தரித்திரம் தரும் இந்த 5 பொருட்கள் சமையலறையில் இருந்தால் உடனே இடத்தை மாற்றி விடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.