நமக்கே தெரியாமல் வீட்டில் நாம் செய்யக்கூடிய இந்த சிறு சிறு தவறுகளும் கூட, நம் வீட்டிற்கு மிக பெரிய தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

mhalashmi
- Advertisement -

இந்த தவறுகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டிற்கு கஷ்டங்கள் வருவாமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சில தவறுகளை பற்றி தான் இன்றைய பதிவின் நாம் தெரிஞ்சுக்க போறோம். இந்த தவறுகளை செய்தால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் வரும். அறிந்தும் அறியாமலும் கூட இனி இந்த தவறுகளை உங்க வீட்ல செய்ய வேண்டாம். இந்த பதிவை தொடங்குவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம் ‘அசுத்தம் இருக்கும் இடத்தில், அதிர்ஷ்டம் என்னைக்குமே தங்காது’. இதை வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் இருவருமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

mahalakshmi1

குழந்தைகளுக்கு கூட சிறுவயதிலிருந்தே சுத்தத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்தால், உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகள் கூட மகா லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் வீட்டை சுற்றி உள்ள சந்து பகுதிகளில், பாசி படர்ந்து இருக்கும். பச்சை நிறத்தில் எந்த வீட்டை சுற்றி பாசி படர்ந்து இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக கஷ்டங்கள் வரும். நிறைய பேர் குளியலறை, சமையல் அறை சிங், வாஷ்பேஷன் இந்த இடங்களில் கூட பச்சை நிறத்தில் பாசி பிடித்து இருக்கும். இப்படியாக, வீட்டில் பாசி படியும் அளவிற்கு ஒரு இடத்தை நான் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அது நம் வீட்டிற்கு பல மடங்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

bath-room-cleaner1

அடுத்தபடியாக மிக மிக முக்கியமான விஷயம். குளியலறையிலும் கழிவறையிலும் வைத்திருக்கக்கூடிய பக்கெட் பாசி படிந்து இருக்கக்கூடாது. நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தினமும் குளிக்கிறோம். ஆனால் சில பேர் வீடுகளில் குளியல் அறையில் பயன்படுத்தும் பக்கெட், ஜக் இவைகள் கரை படிந்து மிகமிக அசுத்தமாக இருக்கும். மாதம் ஒரு முறையாவது அந்த பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.

- Advertisement -

நிறைய பேர் இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு சமையலறையில் மீதமான சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள். அது பழைய சாதம். இப்படி செய்வது மிக மிக நல்லது. அதாவது சமயலறையை சுத்தமாக துடைத்து விடாமல், ஒரு சிறிய கிண்ணத்தில் அன்றைய தினம் சமைத்த சாதத்தில் கொஞ்சமாக வைத்து தண்ணீர் ஊற்றி அடுப்புக்கு பக்கத்திலேயே நாம் வைக்க வேண்டும்.

kitchen1

ஆனால் மறுநாள் காலை நீங்கள் சமையல் அறைக்கு சென்ற உடன் பழைய சாதம், குழம்பு எது உங்கள் சமையல் அறையில் இருந்தாலும் அதை முதலில் சமையலறையில் இருந்து எடுத்து அகற்றிவிட்டு, அதன் பின்புதான் புதிய சாதத்தை சமைக்க வேண்டும். பழைய சாதத்தை அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டு புதிய சாதத்தை சமைப்பது என்பது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்காது.

- Advertisement -

fridge0

குளிர்சாதனப் பெட்டி என்ற ஒன்று எப்போது நம் வீட்டிற்குள் வந்ததோ அப்போதே நேத்து சமைத்தது, முந்தாநாள் சமைத்தது, போனவாரம் சமைத்தது என்று வரிசையில் அந்த ஃப்ரிட்ஜுக்குள் ஏகப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து இருப்போம். இப்படி பல நாட்கள் சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்திருப்பதும் வீட்டிற்கு அவ்வளவு நல்லது அல்ல. அன்றாடம் மீதமாகும் பொருட்களை அன்றாடம் உங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

cooking'

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்திற்குமே பொதுவான ஒரு விஷயம் என்றால் அது சுத்தம். ஆன்மீக ரீதியாக பார்த்தால் இது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம். உங்களால் இதையெல்லாம் ஆன்மீகம் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், என்றாலும் பரவாயில்லை.

money4

மேல் சொன்ன விஷயங்களில் உங்களுடைய வீட்டில் ஒரு தவறு நடந்தால் கூட, அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். ஆரோக்கிய பிரச்சனை உங்களுடைய வீட்டில் வீண் விரயங்களை கொண்டுவரும். கஷ்டத்தை கொடுக்கும். மருத்துவச் செலவு, அதன் பின்னால் வீட்டில் பண கஷ்டம் என்று தொடர்ந்து ஒவ்வொரு தரித்திரத்தையும் உங்களுடைய வீட்டிற்குள் கொண்டு வர ஆரம்பித்து விடும்.

money-lakshmi

இந்த விஷயங்களை ஆன்மீக ரீதியாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி, ஆரோக்கிய ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி மேல் சொன்ன தவறுகளை, உங்கள் வீட்டில் நீங்கள் இதுநாள் வரை செய்திருந்தால், அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் குடும்பத்திற்கு கோடி நன்மைகளை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -