இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ? எங்கிருந்துதான் இதையெல்லாம் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியலப்பா! அப்படின்னு சொல்ற அளவுக்கு இன்ட்ரஸ்டிங்கான வீட்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக.

tips
- Advertisement -

ரூம் போட்டு யோசித்தாலும் இப்படி ஒரு ஐடியாவை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. வீட்டிற்கு தேவையான பயனுள்ள சின்ன சின்ன குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்புகள் எல்லாம் நிச்சயம் அடிக்கடி பயன்படும். இந்த மாதிரி ஐடியாவை எல்லாம் அடிக்கடி எடுத்து விடும்போது, நமக்கு ஸ்மார்ட் இல்லத்தரசிகள் என்ற பட்டமும் கிடைக்கும். மற்ற பெண்மணிகள் கூட்டத்தில் நாம் கொஞ்சம் ஸ்பெஷலாக தெரிந்தால் அது நமக்கு பெருமை தானே.

குறிப்பு 1:
அடுப்பில் கடாயை வைத்து தேவையான மிளகு போட்டு, லேசாக சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு இது நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து, மிளகுத்தூள் தயார் செய்வோம் அல்லவா. ஆனால் ஒரு சில நாட்களில் இந்த மிளகுத்தூளில் இருக்கக்கூடிய வாசமும் காரமும் குறைந்து போய்விடும். நீண்ட நாட்களுக்கு மிளகுத்தூளில் அந்த வாசமும் காரமும் போகாமல் இருக்க என்ன செய்வது. மிளகை கடாயில் போட்டு வறுத்தீங்க அல்லவா. அப்போது அதிலிருந்து ஒரு ஐந்து ஆறு, மிளகுகளை எடுத்து ஒரு சின்ன வெள்ளை காட்டன் துணியில், வைத்து முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த மிளகுத்தூள் பாட்டிலுக்கு உள்ளே இந்த முடிச்சை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு மிளகுத்தூள் பிரஷ்ஷாக வாசம் போகாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு சிறிய கிண்ணத்தில் கற்பூரம் 2 நசுக்கி போடவும். அடுத்து கம்ப்யூட்டர் சாம்பிராணி நசுக்கி போடவும். இதனோடு 2 பிரியாணி இலை அல்லது வேப்ப இலைகளை போட்டு, வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பற்ற வைத்து விடவும். இதிலிருந்து வெளிவரும் புகை உங்கள் வீட்டில் ஒரு கொசுவை கூட தங்க விடாது. அது மட்டும் இல்லாமல் பிரியாணி புகையின் வாசம் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

குறிப்பு 3:
வரமிளகாய் தீரும் போது அந்த டப்பாவின் அடியில் மிளகாய் காம்புகளும், மிளகாய் விதைகளும் நிறைய இருக்கும். சில பேர் இதை எடுத்து அப்படியே குப்பையில் தான் போடுவாங்க. அப்படி செய்யாதீங்க. அந்த வர மிளகாய் காம்புகளையும் விதைகளையும் ஒரு பேப்பரில் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். அந்த வாசம் வெளியே போகும் அளவிற்கு சின்ன ஊசியை வைத்து பேப்பரில் ஓட்டை போட்டு விடுங்கள். அதே சமயம் பேப்பர் பொட்டலத்தில் உள்ளே இருக்கும் வர மிளகாய் விதைகளும் வெளியே வரக்கூடாது. இந்த பேப்பர் பொட்டலங்களை அரிசி பருப்பு, தானிய வகைகளில் புதைத்து வைத்தால் இந்த மிளகாய் நெடிக்கு அரிசி பருப்பில் சீக்கிரம் வண்டு வராமல் இருக்கும். ஏற்கனவே அரிசி பருப்புக்கு உள்ளே வண்டு இருந்தாலும் அது வெளியே வந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
உங்க சிங்க் பார்ப்பதற்கு பளபளப்பு இல்லாமல் இருக்கிறதா. எவர்சில்வரில் சிங்காக இருந்தால் அதன் மேலே லேசாக தூள் உப்பை தூவி விடுங்கள். வாழைப்பழ தோளுக்கு உள்பக்கம் இருக்கக்கூடிய பகுதியை உப்புக்கு மேலே வைத்து சிங்கை லேசாக தேய்த்துக் கொடுத்தால் சிங்கு ஐந்தே நிமிடத்தில் பளபளப்பாக மாறும்.

குறிப்பு 5:
வாஷிங்மெஷினில் பெட்ஷீட், தலையணை உறை போன்ற ரொம்பவும் அழுக்குப் படிந்த கடினமான துணிகளை போட்டு, துவைக்கும் போது, துணி துவைக்கும் பவுடரோடு சேர்த்து படிகார பொடி 1 ஸ்பூன் போட்டுக்கோங்க. உங்களுடைய அழகான பெரிய பெரிய துணிகள் எல்லாம் நன்றாக அழுக்குப் போக வாஷிங் மெஷினிலேயே துவைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை எங்கேயும் கேள்விப்படாத, டாப்பு டக்கர் ஐடியா! வீட்டு வேலைகளை ஜம்முனு முடிக்க இந்த டிப்ஸை எல்லாம் இத்தனை நாட்கள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே.

குறிப்பு 6:
ஒரு சின்ன கவர் எடுத்துக்கோங்க. அது சோப்பு போட்டு வரும் கவராக இருந்தாலும் பரவாயில்லை. அதன் உள்ளே இரண்டு மூன்று கற்பூரம் போட்டு சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இந்த கவருக்கு மேலே ஊசியை வைத்து அல்லது சேஃப்டி பின்னை வைத்தோ சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு அப்படியே பீரோவுக்குள் வைத்து விடுங்கள். கற்பூரம் சீக்கிரம் கரைந்தும் போகாது. அதே சமயம் கற்பூரத்திலிருந்து வாசம் வெளிவந்து கொண்டே இருக்கும். பூச்சி கற்பூரம் போடாமலேயே உங்கள் வீட்டு பீரோ எப்போதும் நறுமணமாக இருக்கும். பூச்சி தொல்லைகளும் இருக்காது.

- Advertisement -