வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க இதுவரை யாருக்கும் தெரியாத ஆன்மீக குறிப்பு

amman veedu
- Advertisement -

வீடு எப்போதும் லட்சுமி கடாட்சத்தும் நிறைந்திருக்க வெள்ளி செவ்வாய் பூஜை செய்ய வேண்டும். தினமும் விளக்கேற்ற வேண்டும் என்பன போன்ற பல தகவல்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் வீட்டில் இறை சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் இத்துடன் சேர்த்து நாம் செய்ய வேண்டிய ஒரு சில காரியங்களும் உள்ளது.

அப்படியானால் நம் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க இந்த செயல்களை செய்வதால் கிடைக்காதா என்று பலரும் கேட்கலாம். இவற்றையெல்லாம் செய்வதுடன் நாம் செய்யக் கூடாத சில விஷயங்களும் உள்ளது. அதே நேரத்தில் அந்த தெய்வத்தையே நிரந்தரமாக நம் வீட்டில் தங்க வைக்கவும் சில வழிமுறைகளை ஆன்மீகம் தந்திருக்கிறது அதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க

முதலில் வீட்டில் இறை சக்தி நிறைந்திருக்க நாம் செய்யக் கூடாதவற்றை தெரிந்து கொள்ளலாம். வீட்டு வாசலில் அமர்வது, தலை வாருவது, வாசலில் எண்ணெய் வஸ்துக்களை எப்போதும் வைத்திருப்பது, தகாத சொற்களை பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் வீட்டில் எப்பொழுதும் அழுக்குத் துணிகள், தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி துவைத்த துணிகளை கூட உடனே நாம் மடித்து எடுத்து வைக்க வேண்டும். மேலும் நாம் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம், அந்த நேரத்தில் விளக்கு ஏற்றும் நேரம் வந்து விட்டால் அப்படியே போய் விளக்கு ஏற்ற கூடாது.

- Advertisement -

நம் கை கால் முகம் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு தலைவாரி பொட்டு வைத்து அதன் பிறகு நம் கைகளில் கொஞ்சம் வாசனை திரவியத்தை (ஜவ்வாது அத்தர்) இவற்றை பயன்படுத்தலாம். நறுமணமிக்க இந்த கைகளால் தீபத்தை ஏற்றும் போது தாயாரின் வாசம் பரிபூரணமாக இருக்கும்.

எந்த வீட்டில் நல்ல வாசனை வீசுகிறது அங்கு வாசம் செய்பவர் தான் தாயார். இது அனைத்து தெய்வங்களுக்கும் இதுவே பொருந்தும். ஆகையால் நாம் உடுத்தும் உடை, வீட்டில் இருக்கும் சோபா மற்ற இடங்கள் போன்றவற்றில் எப்பொழுதும் நல்ல நறுமணம் வீசும் படி பார்த்துக் கொள்ளுங்கள். சகல தெய்வங்களும் நல்ல வாசத்திற்கு அடிமை தான்.

- Advertisement -

இப்போது இறை சக்தியை அதிகரிப்பதற்கான அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிகப்பு நிற சந்தன சக்கையை வாங்கிக் கொள்ளுங்கள். சந்தன கட்டை கிடையாது சந்தன சக்கை வாங்க வேண்டும். இதை ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து ஆறு ஏலக்காவை பொடித்து இதில் சேர்த்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சு உங்கள் வீட்டில் நிலை வாசலில் உட்புறம் அதாவது வீட்டிற்கு உள்ளே கட்டி தொங்க விடுங்கள். இது எப்பொழுதும் அங்கேயே இருக்கட்டும் மாதத்திற்கு ஒரு முறை இதை மாற்றி கட்டினால் போதும். அதே போல் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் கைப்பிடி அளவு கல் உப்பு அதிலும் இதே போல் ஆறு ஏலக்காவை சேர்த்து வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைத்தையும் பெற இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள்

நீங்கள் செய்யும் பூஜை நமஸ்காரங்களுடன் நாம் செய்யக் கூடாத செயல்களை தவிர்த்து விட வேண்டும். இத்துடன் மேற்சொன்ன இந்த இரண்டு விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது இறை சக்தி நம் வீட்டில் அதிகரித்து வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -