கறித்தொக்கின் சுவையில் அருமையான கொண்டைக்கடலை கறியை ஒருமுறை இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்கள். இதன் ருசிக்கு கடாயில் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது

chenna
- Advertisement -

காய்கறியில் செய்யக்கூடிய பொரியல், கூட்டு இவற்றைவிட அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது என்னவென்றால் அசைவ உணவுகள் தான். ஏனெனில் இதில் தான் மிகவும் காரசாரமான மசாலாக்கள் சேர்த்து, பக்குவமான முறையில் உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. இதன் சுவை மற்றும் வாசனை பசி இல்லாதவர்களுக்கும் கூட பசியை உண்டாக்கி விடும். எனவே தான் பலரது வீடுகளிலும் அசைவ உணவை அதிகமாக சமைக்கின்றனர். ஆனால் புரதச்சத்து அதிகமுள்ள தானிய வகைகளையும் உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாகும். அவ்வாறு கொண்டைக்கடலையில் உடம்பிற்கு தேவையான புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு இதிலிருக்கும் புரதச்சத்து அவசியம் தேவைப்படுகிறது. எனவே கொண்டைக்கடலையை வைத்து கறித்தொக்கின் சுவையில் எப்படி சுவையான கொண்டைக்கடலை மசாலா கிரேவி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை – ஒரு கப், மீல்மேக்கர் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, சோம்பு – அரை ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், தேங்காய் – 5 சில்லு, எண்ணெய் – 5 ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 3, கிராம்பு – 3, பிரியாணி இலை – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை சுத்தமாக கழுவி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். பின்னர் மறுநாள் காலை கொண்டைக்கடலை கிரேவி செய்வதற்கு முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் மீல்மேக்கரை தண்ணீரில் சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து சில்லு தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் கசகசா சேர்த்து முதலில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி மசியும் பதத்திற்கு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு கொண்டைக்கடலை, மீல்மேக்கரை சேர்த்து வதக்கி விட்டு, அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து, மூன்று அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கிய பின்னர், இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கிளறிவிட்டு பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -