ரோஜா, மல்லி போன்ற பூச்செடிகள் நன்கு பூத்துக் குலுங்க குப்பையில் தூக்கி எறியும் இந்த பொருட்களை இனி இப்படி செய்து பாருங்கள், கொத்து கொத்தாக பூக்களை அள்ளலாமே!

garlic-peel-rose-jasmine
- Advertisement -

ரோஜா, மல்லி போன்ற பூச்செடிகள் எல்லோருடைய வீட்டிலும் விரும்பி வளர்க்கப்படும் ஒரு செடி வகையாக இருக்கின்றன. இதன் மணமும், குணமும் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இதை பராமரிப்பதற்கு நிறைய செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் குப்பையில் வீணாக தூக்கி எறியும் இந்த பொருட்களைக் கொண்டே மிகப்பெரிய அளவில் நல்ல பராமரிப்பு கொடுக்க முடியும். அப்படியான பொருட்கள் என்னென்ன? அதை பயன்படுத்தும் விதம் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா மற்றும் மல்லி போன்ற செடிகளுக்கு எப்பொழுதும் காற்றோட்டமும், ஈரப்பதமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மண்ணில் ஆக்சிஜன் புகுமாறு நல்ல காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். இதனால் செடிகள் செழிப்பாக வளரும். இறுக்கமான மண்ணில் இச்செடிகள் வாடி போய்விடும். கட்டிங் முறை கிளை செடிகள் மற்றும் வாடிய கிளைகளை அவ்வபோது கத்தரித்து எடுத்து விட வேண்டும். இதனால் மென்மேலும் அவை நிறைய கிளைகளை விட ஆரம்பிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு கிளையிலும் நிறைய பூக்களும் பூக்கும்.

- Advertisement -

நீங்கள் வீட்டில் டீ போடும் சமயத்தில் சர்க்கரை போடாமல் டீ போடுங்கள். பின்னர் வடிகட்டிய பின்பு கிடைக்கும் தேயிலை தூளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த தேயிலை தூளை பயன்படுத்தும் பொழுது செடிகளில் எறும்பு வர வாய்ப்புகள் உண்டு. அல்லது ஃப்ரெஷான டீ தூளையும் பயன்படுத்தலாம். மூணு டீஸ்பூன் அளவிற்கு டீத்தூள் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதனுடன் நீங்கள் ஒரு கைப்பிடி அளவிற்கு வீணாக தூக்கி எறியும் வெங்காயத்தினுடைய தோல் மற்றும் பூண்டு உரிக்கும் போது கிடைக்கும் தோல் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்க்க வேண்டும். வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோல் ஆகியவற்றில் செடிகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் செடிகளை நன்கு பூத்துக் குலுங்க வளர செய்யும். மேலும் செடிகளுக்கு உண்டாகும் நோய் தாக்குதல்களில் இருந்தும் இவை எளிதாக பாதுகாக்கும். இதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகள் கூட நாம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது அரிசி களைந்த தண்ணீர் சேர்க்க வேண்டும். அதாவது நீங்கள் சாதத்திற்கு வடிக்கும் அரிசியை கழுவும் போது கிடைக்கும் இரண்டாவது தண்ணீரை எடுத்து வைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு கால் லிட்டர் அளவிற்கு சேர்த்தால் சரியாக இருக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் இப்பொழுது முக்கால் லிட்டராக சுண்டியதும் அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். எந்த அளவிற்கு குளிர்ச்சியாக மாறுகிறதோ அந்த அளவிற்கு நன்மை.

நன்கு ஆறிய பின்பு இதை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஒரு டம்ளர் அளவிற்கு உங்களுடைய செடிகளுக்கு வேரில் விட்டு வந்தாலே போதும், எல்லா மலர் செடிகளும் பூக்களை கொத்து கொத்தாக பூத்து, மலர்ந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். பல்வேறு விதமான பூச்சி தாக்குதல்களில் இருந்தும் இந்த இயற்கை உரம் உங்களுடைய செடிகளை பாதுகாத்து தரும். இனியும் இந்த பொருட்களை வீண் என்று குப்பையில் வீசாதீர்கள்.

- Advertisement -