காய்கறி, பழங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை சுத்தம் செய்யும் முறை.

vegetable washing
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் சமையலுக்காக நாம் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களிலும் நம்மை அறியாமலேயே சில விஷத்தன்மை மிக்க பொருட்களை சேர்த்து உண்ணுகிறோம். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் பூச்சிகள் தாக்க கூடாது என்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகப்படுத்துவார்கள். அதை நாம் முறையாக சுத்தம் செய்யாமல் உட்கொள்ளும் பொழுது அதனால் நம் உடலில் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வீட்டு குறிப்புகள் குறித்த பகுதியில் காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும் எந்த முறையில் சுத்தம் செய்தால் அதில் இருக்கும் நச்சுத்தன்மை போகும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக காய்கறிகளில் எந்தவித பூச்சிகளின் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதிகமான காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் அதில் பல ரசாயனங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் விவசாயிகள் தெளிப்பார்கள். இந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை நாம் முறையாக நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத பொழுது நமக்கு அதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் கலக்காத காய்கறிகள் சில இடங்களில் கிடைக்கின்றன என்றாலும் அதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் அதை பாமர மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் கெமிக்கல் நிறைந்த உணவுப் பொருட்களை தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியில் வருவதற்கு சில முறைகளை நாம் பின்பற்ற முடியும்.

முதலில் காய்கறிகளை அன்றாடம் வாங்கும் பழக்கம் வரவேண்டும். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் அந்த பழக்கம் இல்லாமல் வாரத்திற்கு ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு முறையோ வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம். தினமும் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை எடுத்து கழுவி பிறகு சமைக்க வேண்டும். அவ்வாறு கழுவும் பொழுது முதலில் சாதாரண தண்ணீரை வைத்து காய்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். பிறகு மறுபடியும் புதிதாக தண்ணீரை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை போட்டு நன்றாக கரைத்து விட்டு கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளையும் போட்டு அதில் காய்கறிகளை சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நன்றாக தேய்த்து கழுவி மறுபடியும் சாதாரண தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். இப்படி உபயோகப்படுத்தினால் அந்த காய்கறிகளில் இருக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. கீரைகளை நாம் அலசும் பொழுது 20 நிமிடம் ஊற வைக்க முடியாது என்பதால் 5 நிமிடம் மட்டும் உப்பு போட்ட தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

சில பழங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மெழுகு தடவப்படுகிறது. அப்படிப்பட்ட பழங்களை நாம் கழுவும் பொழுது தண்ணீரில் வினிகரை சேர்த்து ஊற வைத்தால் அந்த மெழுகு உருகி வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: சமையல் அறையில் குட்டி குட்டி கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபட.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி நாம் உண்ணக்கூடிய காய்கறிகளையும், பழங்களையும் பூச்சிக்கொல்லிகளில் இருந்து சுத்தப்படுத்த முடியும்.

- Advertisement -