வேண்டுதல் நிறைவேற தீபம்

job dheepam
- Advertisement -

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக விளங்குவது நல்ல வேலை தான். இந்த வேலை மட்டும் நல்ல முறையில் அமைந்து விட்டால் போதும். நாம் நினைப்பவை அனைத்தையும் நாமே சம்பாதித்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த காலக்கட்டத்தில் வேலை அமைவதெல்லாம் ஒன்றும் அத்தனை எளிதான காரியம் கிடையாது.

ஒரு வேளை நீங்கள் நினைத்தபடி வேலை கிடைத்து விட்டாலும் அந்த வேலையில் நல்லபடியாக உழைத்து முன்னுக்கு வர எத்தனையோ இடையர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அந்த தடைகளை எல்லாம் உடைத்து முன்னேறி செல்ல உங்களுடைய முயற்சி உழைப்புடன் சேர்த்து இந்த ஒரு தீப பரிகாரத்தையும் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு என்பதை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க தீப பரிகாரம்

நம்முடைய இந்து தர்ம சாஸ்திரத்தில் தீபத்தின் ஒளியில் இறைவன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. ஆகையால் இறை வழிபாட்டில் தீபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இறைவழிபாட்டில் நாம் எதை செய்தாலும் செய்யாமல் போனாலும் தீபம் ஏற்றினால் தான் இறை வழிபாடு நிறைவாக இருக்கும். அத்தகைய தீபத்தைக் கொண்டு நம்முடைய இந்த தடைகளை எல்லாம் எப்படி தகர்த்து தெரிவது என்று பார்க்கலாம்.

முதலில் வேலை கிடைப்பதற்கான தீப பரிகாரத்தை பார்க்கலாம். இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் பூஜை அறையிலேயே ஏற்றலாம். இந்த தீபங்கள் அனைத்தையும் கிழக்கு அல்லது வடக்கு முகமாக பார்த்து தான் ஏற்ற வேண்டும். இந்த தீப பரிகாரத்திற்கு சந்தனம் தேவை. சந்தனம் என்றால் நம் இழைத்து வைக்கக் கூடிய சுத்தமான சந்தனம்.

- Advertisement -

இந்த சந்தனத்தை வாங்கி நன்றாக குழைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த சந்தனத்தை ஒரு மனையின் மேல் தடவி அதன் மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வாருங்கள். இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வரும் போது வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேலை கிடைத்து விட்டது அதில் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை எல்லாம் பெற வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான எதுவும் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள். சிறிய கிண்ணத்தில் முழுவதுமாக ஏலக்காயை நிரப்பி விடுங்கள் ஏலக்காயின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வாருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வும் சம்பள உயரும் கிடைக்க வழிவகுக்கும்.

- Advertisement -

அடுத்தது மங்கள காரியங்கள் நடக்க தீபம். இதற்கு மஞ்சளை குழைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு மஞ்சள் கிழங்கை வாங்கி அரைத்து அந்த மஞ்சள் தூளை குழைத்து உருண்டையாக செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதன் மேல் சின்ன குழி போல செய்து அகலை வைத்து நெய் ஊற்றி தெய்வம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் மூலம் நீங்கள் நடக்க வேண்டும் என நினைத்த அனைத்து மங்கள காரியங்களும் சுகமாக நடந்து முடியும் என்று சொல்லப்படுகிறது.

எந்த ஒரு செயலை தொடங்கவும் செயல்படுத்தவும் மனதில் தைரியமும் துணிவும் தேவை. ஒரு சிலர் இதில் எப்பொழுதும் பின்தங்கியே இருப்பார்கள் எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு எந்த ஒரு செயலையும் செய்ய தயங்குவார்கள். அப்படியானவர்கள் குங்குமத்தை எடுத்து பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவில் ஒரே ஒரு அகலை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தால் பய உணர்வு நீங்கும்.

இதையும் படிக்கலாமே: சூரசம்ஹார நாளில் செய்யக் கூடாதவை

நாம் தினமும் ஏற்றக்கூடிய தீபத்தை இந்த முறையில் ஏற்றி வழிபட்டு வரும் போது நமக்கு தேவையான அனைத்தும் நம்மை தேடி வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீப வழிபாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -