- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை கிடைக்க துவரை பரிகாரம்

வேலை கிடைக்க துவரை பரிகாரம்

- Advertisement -

மனதிற்கு பிடித்த வேலை அமைவது என்பது சற்று சிரமமாகவே இந்த காலத்தில் இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் ஒரு சமயத்தில் தலைவிரித்து ஆடியது. இப்போது திரும்பும் இடமெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டாலும், நாம் நினைத்த வேலை மட்டும் கிடைப்பது சிரமமாகத் தான் இன்றும் இருக்கிறது. நினைத்த வேலை உடனே அமைவதற்கு முருகனுக்கு செய்யக் கூடிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முருகப் பெருமானுக்கு பரிகாரம் செய்ய உகந்தது செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க் கிழமை அன்று முருகனை நினைத்து நீங்கள் என்ன வேண்டினாலும், அது விரைவாகவே பலிக்கும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. செவ்வாய்க் கிழமையில் வரக் கூடிய செவ்வாய் ஹோரையில் குறிப்பாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய அளவிலான தாம்பூல தட்டில் துவரம் பருப்பை பரப்பிக் கொள்ளுங்கள். துவரம் பருப்பை பரப்பிக் கொண்டு அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வையுங்கள். பரிகாரம் செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்படும் அகல் விளக்கு புதிதாக இருக்க வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில் அதே விளக்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள். விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பின்பு அதில் சிகப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கடன் தொல்லை தீர்வதற்கு, பகை மறைவதற்கு, துன்பம் நீங்குவதற்கு, நினைத்த வேலை கிடைப்பதற்கு சிகப்பு நிற திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். சிகப்பு நிற திரியை பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது வெள்ளை நிற பஞ்சு திரியை குங்குமத்தில் தோய்த்து நன்கு உலர விட்டு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க் கிழமையில் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் முருகனை அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் மட்டும் அல்லாமல் முருகனுடைய வேல் வைத்திருப்பவர்கள் அதற்கும் தண்ணீர் மற்றும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, பூ போட்டு வைத்து அலங்காரம் செய்து, பின்னர் முருகனுக்கு முன்பாக தாம்பூல தட்டில் மேற்கூறியபடி விளக்கு வைத்து ஏற்றி முருகனுடைய மந்திரங்கள், கவசங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரிந்த வரை உச்சரித்து தீபம் ஏற்றிய பின்பு வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
16-11-2024 கிருத்திகை வழிபாடு

இப்படி தொடர்ந்து 6 செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும். இரண்டே வாரத்தில் உங்களுக்கு நீங்கள் தேடிய மனதிற்கு பிடித்த நல்ல வேலை நிச்சயம் கிடைத்துவிடும். வேலை கிடைத்த பிறகும் இந்த பரிகாரத்தை இடைவிடாமல் ஆறு செவ்வாய் கிழமைகளில் செய்து முடித்து விடுங்கள். அப்போது தான் முருகனுடைய அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரம் வேலை கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு முறை பரிகாரம் செய்யும் பொழுதும் புதிய துவரம் பருப்பை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய துவரம் பருப்பை மறுநாள் புதன்கிழமை அன்று நீங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு தானம் கொடுத்து விடுங்கள். ஒவ்வொரு வாரமும் விளக்கை தவிர விளக்கு திரி, எண்ணெய், துவரம் பருப்பு போன்றவற்றை மாற்றிவிட வேண்டும்.

சற்று முன்