வெள்ளை சட்டையில் படிந்த, கலர் சாயத்தை நீக்குவது எப்படி?

dress
- Advertisement -

பெரும்பாலும் கலர் துணிகளை விட, இந்த வெள்ளை துணிகளை துவைப்பதில் தான் இல்லத்தரசிகளுக்கு சிரமம் இருக்கும். சில சமயம் கலர் துணிகளோடு வெள்ளைத்துணிகளை நனைத்து ஊறவைக்கும் போது, கலர் துணியில் இருக்கும் சாயம், வெள்ளை துணியில் ஒட்டிக் கொள்ளும். அதை அவ்வளவு சுலபமாக நீக்க முடியாது.

அந்த வெள்ளை சட்டையை அப்படியே வீணாகப் போகும் அளவிற்கு நிலைமை ரொம்பவும் மோசமாகிவிடும். புதுசாக வெள்ளை சட்டை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் நிறைய முறை நம் வீட்டில் இருப்பவர்களிடம் திட்டு கூட வாங்கி இருப்போம். இப்படி வெள்ளை சட்டையில் கலர் சாயம் பூசி விட்டால், அதை நீக்குவது எப்படி. சுலபமான வீட்டுக் குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வெள்ளை சட்டையில் ஒட்டிய சாயம் நீங்க வீட்டு குறிப்பு

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் படிகாரம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். சாயமான ஒரு சட்டைக்கு, ஒரு ஸ்பூன் தூள்படிகாரம் போதும். படிகாரக் கல்லை எடுத்து ஒரு கல்லால் இடித்தால் தூள் பரிகாரம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

அந்த சட்டை மூழ்கும் அளவுக்கு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக்கோங்க, அதில் இந்த தூள்படிகாரம், கல்லுப்பு கொஞ்சம் போட்டு நன்றாக கரைத்து விட்டு சாயம் படிந்த சட்டையை இதில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். பிறகு அந்த சட்டையை அப்படியே அலசியப்படி எடுத்தால் அதில் இருக்கும் சாயம் 80% அந்த தண்ணீரிலேயே நீங்கிவிடும். பிறகு லேசாக அந்த சாயத்தின் சாயல் சட்டையில் கொஞ்சம் தெரியும்.

- Advertisement -

குளிக்கின்ற சோப் இருக்குதல்லவா அதை எடுத்து போட்டு இப்போது இந்த சட்டையை லேசாக துவைத்து தண்ணீரில் அலசி நல்ல வெயிலில் காய வைத்து எடுத்து பாருங்கள். உங்கள் சட்டையில் சாயம் பட்ட தடமே இருக்காது. இப்போதுதான் சாயம் ஒட்டிக்கொண்டது என்றால் உடனடியாக இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கவும். ரொம்ப நாள் சாயம் ஒட்டிய சட்டையில் இருக்கும் கறை நீங்க இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: மார்கழி வெள்ளியில் வீட்டில் போட வேண்டிய சாம்பிராணி தூபம்

ஆனால் அந்த சாயத்தை போக்குவது சில சிரமங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக சாயம் பட்டதை பார்த்தால் இந்த குறிப்பை பின்பற்றுங்கள். நிச்சயமாக சாயம் பட்ட சட்டையில் இருக்கும் அந்த சாய கறை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -