முக சுருக்கம், முகக் கருமை, முகப்பரு இந்த 3 பிரச்சனையையும் சரி செய்ய 3 தக்காளி இருந்தால் போதும். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

- Advertisement -

தக்காளி அழகு குறிப்பு

அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒரு காய் வகையாக தக்காளி திகழ்கிறது. தக்காளி பழத்தில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இந்த தக்காளியை நமது முக அழகை மேம்படுத்தவும் பல வகையில் பயன்படுத்த முடியும் என்பது பலருக்கும் தெரியாது. அந்த வகையில் தக்காளி பயன்படுத்தி பெண்கள் தங்களின் முக அழகை மேம்படுத்த உதவும் சில அழகு குறிப்புக்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

தக்காளி பேஸ் பேக்

அதிகப்படியான நேரம் வெயிலில் நடமாடுவதால் பெண்களின் முக சருமம் கருத்து, அவர்களின் முக அழகை கெடுக்கும். இப்படி வெயிலால் கருத்து போன முகத்தை மீண்டும் அதன் இயல்பான நிறத்தை பெற செய்வதற்கு உதவுகிறது தக்காளி. இதற்காக நன்கு பழுத்த தக்காளி பழத்தை விதைகள் நீக்கி, நன்கு நசுக்கி கூழ் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தக்காளி பழ கூழ் சேர்த்து, அதனுடன் 3 – 4 நான்கு துளிகள் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை பெண்கள் தங்களின் முகத்தில் கருத்து போன பகுதிகளில் நன்கு தடவி, ஒரு 15 நிமிடம் வரை அப்படியே காய விட்டு, பிறகு இதமான தண்ணீரில் முகத்தை கழுவி, காய்ந்த டவலை கொண்டு லேசாக முகத்தை தொட்டு தொட்டு எடுக்க வேண்டும். இந்த பேஸ் பேக்கை தினமும் காலை, மாலை என இரு வேளையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் கருத்து போன முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.

முக சுருக்கம் நீங்க

சில பெண்கள் வயது குறைவாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் லேசாக சுருக்கங்கள் ஏற்பட தொடங்கி ஒரு வயதான தோற்றத்தை கொடுக்கும். இப்படி தங்கள் முகத்தில் ஏற்படுகின்ற வயதான தோற்றத்தை தடுத்து, எப்பொழுதும் இளமை தன்மையுடன் காட்சியளிக்க தக்காளி உதவுகிறது. இதற்காக 1/2 கப் அளவிற்கு தக்காளி பழத்தை நன்கு மசித்து எடுத்துக்கொண்டு அதோடு 1 டேபிள் ஸ்பூன் பசுந்தயிர் மற்றும் 1 டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை பெண்கள் தங்களின் முகம் முழுவதும் நன்றாக தடவி, சிறிது மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு 20 நிமிடங்கள் வரை இந்த கலவையை முகத்திலேயே காய விட்ட பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் பெண்களின் முகத்தில் இருக்கின்ற மிக சுருக்கங்கள் அகன்று முகம் இளமையான தோற்றத்தை பெறும்.

சிலருக்கு முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிந்து அதன் காரணமாக முகப்பருக்கள் வர துவங்குகிறது. இத்தகைய பிரச்சினைகள் நீங்க ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தக்காளி பழச்சாறு எடுத்துக் கொண்டு, அதனுடன் பெண்களின் அழகு கலையில் அதிகம் பயன்படுத்தப்படும் முல்தானி மட்டி 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து, இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த 3 இலைகள் வீட்டில் இருந்தால் தலைக்கு தேய்ச்சு பாருங்க, ஒரு முடி கூட இனி உதிரவே உதிராது

பிறகு இதை முகத்தில் அப்ளை செய்து காயவிட்டு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இப்படி 3 – 4 நாட்களுக்கொமுறை செய்து வந்தால் போதும், பெண்களின் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் கரும்புள்ளிகள் நீங்கி, முக அழகு கூடும்.

- Advertisement -