வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வீடு துடைத்தால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டைவிட்டு வெளியே போய்விடுமா? பூஜை பாத்திரங்களை எந்த நேரத்தில் எந்த கிழமையில் சுத்தம் செய்வது?

pooja-items-lakshmi
- Advertisement -

நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் இந்த சந்தேகம் இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறது. வீட்டை எந்த கிழமையில் துடைப்பது? வீட்டில் இருக்கும் பூஜை அறையை, சுவாமி படங்களை பூஜை பொருட்களை எந்த கிழமையில் சுத்தம் செய்தால் நல்லது? செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமைகளில் வீட்டைத் துடைத்தால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சமும் துடைத்துக் கொண்டே சென்று விடுமா? என்ற கேள்விகளுக்கான சரியான விடையை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

mop1

வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில் வீட்டை துவைத்து சுத்தம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துவைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடுமா? நிச்சயம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் நமக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களே! செவ்வாய்க்கிழமை காலை, வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யக்கூடிய பூஜை தவறி விடக்கூடாது என்பதற்காகத்தான் முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக பூஜை செய்யும் நேரம் தவறி விடும். அப்போது வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்குமா? லேசாக மன கஷ்டம் வரத்தானே செய்யும். இதனால்தான் பூஜை செய்யும் நேரம் தவறக் கூடாது என்று முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள சொல்லி உள்ளார்கள்.

poojai

இல்லைங்க! எனக்கு செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து பூஜை ஜாமான்களை தேய்த்து வைத்து, பூஜை செய்தால் தான் மனதிற்கு திருப்தி இருக்கும் என்றால், வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் காலை 6:00 மணிக்கு முன்பாகவே வீட்டை துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். காலை 6 மணிக்கு உங்கள் வேலை எல்லாம் முடித்து விட்டு நீங்கள் குளித்துவிட்டு வந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு உங்களுடைய பூஜை அறையை தயார் செய்ய முடியும் என்றால், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.

- Advertisement -

நம்முடைய வேலையை சுலபமாக்கி கொண்டால் தான் நம்முடைய மனது முழுவதையும் இறைவழிபாட்டில் இறை சிந்தனையில் ஈடுபடுத்த முடியும். பூஜை செய்யக் கூடிய அன்றைய தினமே எல்லா வேலையும் இழுத்துக் கட்டிக் கொண்டு செய்தால் உடல் சோர்வு, மன சோர்வு ஏற்பட்டு விடும். நிச்சயமாக நம்முடைய வீட்டில் முழுமையான இறை வழிபாட்டில் ஈடுபட முடியாது என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

poojai

சரிங்க, கட்டாயம் செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள், வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள்தான் வீட்டை துவைத்து சுத்தம் செய்ய வேண்டுமா? நாங்கள் எல்லாம் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள். எங்களால் அந்தக் கிழமையில் சுத்தம் செய்ய முடியாது என்றால், உங்களுக்கு எந்த கிழமை சவுகரியமுமோ, செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமையை தவிர்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு முன்பாக உங்களுடைய வீட்டையும் பூஜை அறையையும், பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

pooja-room1

பூஜை அறையாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, தினமும் துடைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் போதும். மாதத்தில் ஒருமுறை வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொண்டால் போதும். பூஜை அறையில் மாதத்திற்கு ஒருமுறை சுவாமி படங்கள் எல்லாம் எடுத்துவிட்டு சுவாமி அறையில் இருக்கும் பேப்பரை மாற்றி முழு சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். வாரத்தில் ஒருநாள் பூஜை அறை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியமானது. தினமும் சுவாமி படங்களில் இருக்கும் வாடிய பூக்களை மட்டும் எடுத்துவிட்டு, உதிர்ந்த சாம்பிராணி சாம்பலை நீக்கிவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் போதும்.

poojai

சரிங்க, இன்று வெள்ளிக்கிழமை. நாளை சனிக்கிழமை அமாவாசை தினமுமோ அல்லது பௌர்ணமியோ, தீபாவளியோ, பொங்கலோ எதோ ஒரு பண்டிகை வருகிறது இப்போது நாம் என்ன செய்வது. வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து சுத்தம் செய்யலாமா என்ற கேள்வியை எழுப்பினால்! வியாழக்கிழமையே உங்களுடைய வீட்டினை சுத்தம் செய்துகொள்ளலாம். வியாழக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளலாம். என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

deepam

வியாழக்கிழமை காலை எப்போதும் போல தீபமேற்றி உங்களுடைய இறை வழிபாட்டை முடித்து விடுங்கள். காலை 8 மணி வரையிலும் தீபம் எரியட்டும். அதன்பின்பு வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு அதை சுத்தமான துணியால் நன்றாக துடைத்து விட்டு, மீண்டும் மஞ்சள் குங்குமம் வைத்து வியாழக்கிழமை மாலையும் உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வியாழக்கிழமை மாலை வீட்டில் தீபமேற்றாமல் இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

vilakku-pray

சில வீடுகளில் வரவேற்பறையில் பூஜை அறையை வைத்திருப்பார்கள். வரவேற்பறையில் தான் வீட்டில் இருப்பவர்கள் தூங்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். இப்படி இருந்தால் என்ன செய்வது. பூஜை செய்வதற்கு முன்பாக நீங்கள் வழிபாடு செய்யக்கூடிய அந்த இடத்தை மட்டும், அதாவது படுத்து உறங்கி இருப்பீர்கள் அல்லவா? வரவேற்பறையில் இருக்கக்கூடிய பூஜை அறைக்கு முன்பாக இருக்கக் கூடிய அந்த இடத்தை மட்டும் துடைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -