- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை ஆன்மீக சமையல்

வெள்ளிக்கிழமை ஆன்மீக சமையல்

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது அன்னை மகாலட்சுமிக்கு உகந்த நாள். இந்த நாளில், பக்திப்பூர்வமாக நாம் சமைத்து உண்ணும் உணவுகள், மனதிற்கு அமைதியையும், ஆன்மீக சக்தியையும் அளிக்கும் என்பது பலரின் நம்பிக்கை. இந்த வெள்ளிக்கிழமையில் உங்கள் சமையலறையை ஆன்மீக ஆற்றல் மையமாக மாற்ற சில சுவையான மற்றும் அருள் நிறைந்த சமையல் குறிப்புகள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம், வாங்க!

மகாலட்சுமிக்கு பிடித்த இனிப்புகள்!
வெள்ளிக்கிழமையில் இனிப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மகாலட்சுமி இனிப்புப் பிரியை என்பதால், இந்த நாளில் பால் சார்ந்த இனிப்புகள் செய்வது சிறப்பானது. பால், அரிசி, சேமியா, பருப்பு என பல வகைப் பாயசங்கள் செய்யலாம். இவற்றில் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சமைக்கும் போது அதன் மணம் வீட்டிற்குள் பரவி தெய்வீக உணர்வை ஏற்படுத்தும். மகாலட்சுமிக்கு இனிப்பு மிகுந்த பாயாசத்தை படைத்து பின் நாம் அதனை எடுத்துக் கொள்ள, அவளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

வெல்லம், அரிசி, நெய் சேர்த்து செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல், வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இனிப்பும், நெய்யின் மணமும் மனதை அமைதிப்படுத்தும். மகாலட்சுமிக்கு படைத்து காலையிலேயே பூஜை செய்து வழிபடுவதால், நாம் உளமாற வேண்டும் வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பதை நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ரவை, சர்க்கரை, நெய் கொண்டு செய்யப்படும் கேசரி, எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் முந்திரி, திராட்சை கூடுதலாக சேர்த்து சமைக்கலாம். வெள்ளிக்கிழமையில் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டும் உண்பது சிறந்தது. இது உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துகிறது. காய்கறிகள் நிறைந்த புலாவ் அல்லது வெஜிடபிள் பிரியாணி சமைக்கலாம். இதில் நெய் சேர்த்து சமைக்கும் போது சுவையும், மணமும் கூடும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் மோர் குழம்பு அல்லது பருப்பு குழம்பு சமைக்கலாம். எளிமையான மோர் குழம்பு அல்லது பருப்பு குழம்பு, சாதத்துடன் சாப்பிட அருமையான சேர்க்கை. வெள்ளிக்கிழமை சமையலில் துவரம் பருப்பு இடம் பெறுவது அன்னை அருள் பெற்று தரும். இவை உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு நிம்மதியையும் தரும். லக்ஷ்மி அருள் கிடைக்கவும் வழி செய்யும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்யலாம். இவற்றில் தேங்காய் துருவல் சேர்த்து சமைப்பது சுவையை கூட்டும். சாத்வீகமான இந்த உணவுகளை அன்றைய நாள் எடுத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆஷாட நவராத்திரி 2025. வாராஹி பீஜ மந்திரம்

நீங்கள் சமைக்கும் உணவுகளை, மகாலட்சுமி படத்திற்கு முன் நைவேத்தியமாகப் படைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படையலில் சாத்வீகமான சைவ உணவு வகைகளும், இனிப்பும் நிறைந்து காணப்படுவதால் மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து நம்முடைய வேண்டுதல்களை ஏற்றுக் கொள்கிறார். பின் பிரசாதமாக வீட்டில் இருக்கும் அனைவரும் உண்ணலாம். இது உணவிற்கு மேலும் தெய்வீக சக்தியை சேர்க்கும். சுத்தமான மனதுடன், நம்பிக்கையுடன் சமைத்து உண்ணும் போது, வெள்ளிக்கிழமையின் ஆன்மீக அருள் நிச்சயம் கிடைக்கும். மேலும் அன்றைய நாளில் சாதத்தை குறைவாகவும், காய்கறிகளை அதிகமாகவும் வைத்து சாப்பிட உடல் சுத்தமாகும், மனம் அமைதியாகும்.

சற்று முன்