நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி. விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வேண்டினால், வேண்டியது உடனே நடக்கும். சங்கடங்கள் தீரும்.

pillaiyar-prayer
- Advertisement -

இரு கைகளை கூப்பி விநாயகரை மனதார நினைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்று ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டாலே போதும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யக்கூடிய எளிமையான கடவுள் விநாயகப் பெருமான். தினம் தினம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் நம் வாழ்வில் தடைகள் இருக்காது. குறிப்பாக நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீர, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு வாய்ந்தது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நாளை தை மாதத்தில் வெள்ளிக்கிழமையோடு சேர்த்த சங்கடஹர சதுர்த்தி தினம் வருகின்றது. இந்த நாளில் எளிமையான முறையில் விநாயகர் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.

நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று விநாயகரின் சிலை இருந்தால், அந்த விநாயகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, சந்தன குங்கும பொட்டு வைத்து அருகம்புல் சாத்தி, வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து 3 செம்பருத்திப் பூ இலைகளை விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். (விநாயகரின் படம் மட்டும் இருந்தாலும் அந்த படத்தை துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.)

- Advertisement -

சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி விநாயகரின் முன்பு வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு என்ன கஷ்டம் உள்ளதோ, அந்த கஷ்டத்தை விநாயகரிடம் சொல்லி அந்தக் கஷ்டங்கள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். காலை இந்த வழிபாட்டை வீட்டில் முடித்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தவர்கள் நாளைய தினம் சாப்பிடாமல் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால் பழம் சாப்பிட்டு உபவாசம் மேற்கொள்ளலாம். எதுவுமே முடியாது என்பவர்கள் பலகாரம் சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. மாலை 6 மணி அளவில் கோவிலுக்கு சென்று விநாயகரின் பெயரைச்சொல்லி விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

- Advertisement -

விநாயகர் சந்நிதியின் முன்பாகவும் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு விநாயகருக்கு முடிந்தால் சிவப்பு நிற செம்பருத்திப்பூ கொடுத்து உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

இறுதியாக வழிபாட்டை முடித்து விட்டு விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு பிள்ளையார் கொட்டுகள் வைத்து நமஸ்காரம் செய்து வீடு திரும்ப வேண்டும். அவ்வளவு தான். உங்களால் முடிந்தால் விநாயகருக்குப் பிடித்தமான ஏதாவது நிவேதனத்தை கோவிலுக்கு எடுத்து சென்று விநாயகருக்கு படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு அந்த பிரசாதத்தை விநியோகம் செய்யலாம். இந்த சுலபமான வழிபாட்டு முறையை மேற்கொண்டாலே போதும். நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். நம்பிக்கையுள்ளவர்கள் விநாயகப்பெருமானின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி உங்களை வந்து சேரும்.

- Advertisement -