ஆடி வெள்ளியில் பெண்கள் தங்களுக்காக வாங்கிக் கொள்ள வேண்டிய முதல் 3 மங்கல பொருட்கள் என்னென்ன?

lakshmi-women
- Advertisement -

பெண்கள் எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஆசை ஆயுசுக்கும் தான் ஒரு சுமங்கலியாக வாழ வேண்டும் என்பதுதான். பெண்கள் தங்களுடைய இல்லற வாழ்க்கையை, வாழ்நாள் முழுவதும் தன் கணவருடன், தன் குழந்தைகளுடன் இனிமையாக வாழ வேண்டுமென்று ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினை மேற்கொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாக தீர்க்க சுமங்கலி பாக்கியமும், சந்தோஷமான இல்லற வாழ்க்கையும் அமையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

women8

இவ்வளவு மகிமைகளை கொண்ட இந்த ஆடி வெள்ளிக் கிழமையில் பெண்கள் தங்களுக்காக எந்தெந்த மங்களகரமான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், தங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க, வீட்டிற்கு தேவையான எந்தெந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் நம்முடைய வீட்டிற்கு நாளை எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதை பார்த்துவிடுவோம். பொதுவாக வெள்ளிக்கிழமை என்றால் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் என்று சொல்வார்கள். இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது கல்லுப்பு. அடுத்தபடியாக மஞ்சள், குங்குமம், சமையலுக்கு பயன்படுத்தும் ஏதாவது ஒரு பருப்பு வகை, ஏதாவது ஒரு தானிய வகை, வெல்லம், பச்சரிசி, வாசனை மிகுந்த ஏலக்காய், கிராம்பு இந்த பொருட்களை நாளை கடையில் இருந்து காசு கொடுத்து புதியதாக வாங்கி வந்து சமையலுக்குப் பயன்படுத்துவது வீட்டிற்கு சுபிட்சத்தை தரும்.

poojai1

இது அல்லாமல் பெண்கள் தங்களுக்காகவே கண்ணாடி வளையல், திரு மாங்கல்ய கயிறு, நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமம் இந்த 3 பொருட்களையும் புதியதாக வாங்க வேண்டும். நாளைய தினம் வாங்கிய கண்ணாடி வளையலை உங்களுடைய கைகளில் அணிந்து கொண்டு அதன் பின்பு வெள்ளிக்கிழமை பூஜையை செய்து வீட்டிற்கு மிகவும் நல்லது. முடிந்தால் இன்று மாலை உங்களுடைய கைகளில் மருதாணி இட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் இந்த கண்ணாடி வளையல்களின் ஓசை உங்கள் வீட்டில் இருக்கும் துர் சக்திகளை வெளியேற்றிவிடும். அதன் பின்பு உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்யக்கூடிய பூஜை முழு பலனை பெறும். நீங்கள் வாங்கிய திருமாங்கல்ய மஞ்சள் கயிறையும் குங்குமத்தையும் அம்பாளின் பாதத்தில் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் கயிறை தேவைப்படும் போது திரு மாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் போட பயன்படுத்திக் கொள்ளலாம்.

mangalyam-kungumam

நாளைய தினம் புதியதாக வாங்கிய குங்குமத்தை மட்டும் உங்களுடைய நெற்றியிலும் திருமாங்கல்யத்திலும் அம்மன் வழிபாட்டை முடித்து விட்டு வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே பெண்களின் மனதில் ஒரு நிம்மதி ஏற்படும். அந்த நிம்மதி, அவர்களுடைய குடும்பத்திற்கு நிறைவான சந்தோஷத்தைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -