கருத்துப் போன பழைய வெள்ளி கொலுசு புதுசு போல பளிச்சின்னு மாற

silver kolusu
- Advertisement -

அந்த காலம் முதல் இந்த காலம் வரை கொலுசை பயன்படுத்தாத பெண்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம. இப்போது பெரும்பாலும் பெண்கள் கொலுசு அணிந்து கொள்வதில்லை இருந்தாலும் நாகரீகமாக மெலிதாகவாவது ஒரு கொலுசை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் இன்றைக்கும் குழந்தைகளுக்கு நல்ல கனமான பெரிய கொலுசு, தண்டு போன்றவற்றை போட்டு அழகு பார்க்கிறார்கள்.

ஒரு பொருளை வாங்கும் போது எப்படி பளிச்சென்று பார்க்க நன்றாக இருக்கிறதோ அதே போல கடைசி வரைக்கும் இருந்தால் தான் நமக்கும் மனம் நிறைவாக இருக்கும். கொலுசை பொருத்த வரையில் வாங்கிய சில நாட்களுக்குள்ளாகவே கருத்து போய் விடும். அதை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினம். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் கருத்துப் போன பழைய வெள்ளி கொலுசை கூட புதிது போல மாற்றும் ஒரு எளிய குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கருத்துப் போன பழைய வெள்ளி கொலுசு புதுசு போல மாற

இந்த முறையில் கொலுசை சுத்தப்படுத்த முதலில் ஒரு ஹாட் பாக்சில் கொஞ்சமாக சுடுதண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பு, பாதி எலுமிச்சை பழச்சாறை பிழிந்து விட்டு, அதில் கொலுசை போட்டு பிழிந்த எலுமிச்சையின் தோலையும் அதிலே போட்டு ஹாட் பாக்ஸை மூடி விடுங்கள்.

இந்த கொலுசு பத்து நிமிடம் வரை இந்த தண்ணீரில் நன்றாக ஊறட்டும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு கொட்டாங்குச்சி எடுத்து நன்றாக எரித்து அதன் கருகிய ஓடை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து பவுடராக எடுத்து விடுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் லைசால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து தண்ணீரில் ஊற வைத்த கொலுசை எடுத்து அதன் மேல் இந்த பேஸ்ட்டை தேய்த்த பிறகு ஊற வைத்த எழுமிச்சை பழதோலை வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். நீங்கள் தண்ணீரில் ஊற வைக்கும் போது அதில் இருக்கும் அழுக்கு மட்டும் போயிருக்கும். இந்த பேஸ்ட்டை வைத்து தேய்க்கும் பொழுது கொலுசு இன்னும் பளிச்சென்று மாறி விடும்.

அடுத்து இந்த கொலுசை நல்ல சுத்தமான தண்ணீரில் அலசிய பிறகு ஒரு ஸ்பூன் ஷாம்பூவை எடுத்து அதை கொலுசின் மேல் தேய்த்து மீண்டும் ஒரு முறை லேசாக ப்ரஷ் வைத்து தேய்த்துக் கொடுங்கள். நாம் கொட்டாங்குச்சி பேஸ்ட்டை வைத்து தேய்த்ததால் ஆங்காங்கே கருப்புத்துகள் படிந்து இருக்கும். அதை நீக்கவே இந்த முறை.

இதையும் படிக்காலமே: டபுள் சைட் டேப் இந்த விஷயங்களுக்கெல்லாம் உபயோகப்படுத்த முடியுமா?

இப்படி ஷாம்பு வைத்து சுத்தம் செய்த பிறகு பாருங்க நீங்களே இது உங்களுடைய பழைய கொலுசு தானா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு கொலுசு புதுசு போல மாறி இருக்கும். பெரும்பாலான நகை கடைகளில் கூட இதே வழிமுறை தான் பின்பற்றுவதாக சொல்கிறார்கள. உங்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -