வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யும் முறை

silver tomato sauce
- Advertisement -

வெள்ளிப் பொருட்களின் பயன்பாடு என்பது அந்த காலத்திலிருந்தே அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது தான். தற்போது நாம் பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள் பெரும்பாலும் காலில் அணியப்படும் கொலுசு தண்டை போன்றவை தான். அதிகபட்சமாக ஏதேனும் சுவாமி சிலைகளும் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகளுமாக இருக்கும்.

முன் காலத்தில் எல்லாம் ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் கூட அதிகமான வெள்ளி பொருட்களை பயன்படுத்தி வந்தார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் முதல் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் என இவைகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஏனெனில் வெள்ளிப் பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் போது வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருகும் என்ற ஒரு ஐதீகமும் உள்ளது.

- Advertisement -

இன்று இதன் பயன்பாடுகள் குறைந்ததற்கு காரணம் விலை அதிகம் ஒரு புறம் இருந்தாலும், இதை பராமரிக்கும் வேலை அதிகம் என்ற காரணத்தினால் தான். இந்த வீட்டுக் குறிப்பு குறித்து பதிவில் வெள்ளிப் பொருட்களை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்யும் முறை

இப்போதெல்லாம் வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வதற்கென்றே கடைகளில் அதிகமான கெமிக்கல் கலந்த பவுடர்கள் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது பொருட்கள் பளிச்சென்று மாறுவது ஒரு புறம் இருந்தாலும் அது சட்டு என்று நிறத்தை மறுபடியும் கருக்க செய்து விடும்.

- Advertisement -

இதில் இன்னொரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கெமிக்கல் கலந்த பொருட்களினால் சுத்தம் செய்யும் போது நாம் எப்படி சுத்தம் செய்தாலும் அதில் ஓரளவேனும் கெமிக்கல் அதில் இருக்கத்தான் செய்யும். இதனால் நாம் பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்களானது உணவு பொருட்கள் சாப்பிட பயன்படுத்தும் பொருட்களாக இருப்பின் நிச்சயம் பக்க விளைவுகள் ஏற்படும்.

ஆகையால் இந்த இரண்டு எளிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் இது போன்ற பிரச்சனைகளையும் தவிர்த்து விடலாம். முதலாவதாக நாம் பயன்படுத்த போவது டொமேட்டோ சாஸ். இந்த டொமேட்டோ சாஸில் கெமிக்கல் இல்லையா? என்ற கேள்வி எழலாம். இந்த டொமேட்டோ சாஸை வீட்டில் தயார் செய்வது மிகவும் சுலபம். அது போல தயார் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் வெள்ளிப் பொருட்கள் டிஷ்யூ பேப்பர் வைத்து நன்றாக துடைத்த பிறகு அந்த பொருட்கள் மேல் இந்த சாஸை தடவி பத்து நிமிடம் ஊற விடுங்கள். அதன் பிறகு மீண்டும் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்தாலே போதும் வெள்ளிப் பொருட்கள் பளிச்சென்று மின்னும். கறைகள் அதிகமாக உள்ள பொருட்கள் என்றால் கூடுதலாக ஒரு பத்து நிமிடம் ஊற வைத்த பின் தேய்த்தால் போதும்.

அடுத்து நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கான்பிளவர் மாவை பயன்படுத்தி எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். ஒரு சில வெள்ளிப் பொருள்கள் வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும் அவற்றை சுத்தம் செய்ய இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும் இந்த கான்பிளவர் மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல குறைத்துக் கொள்ளுங்கள்.

முன்பு சொன்னதைப் போலவே வெள்ளிப் பொருட்களை டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விட்டு அதன் பிறகு இந்த கான்பிளவரை பேஸ்ட்டை வெள்ளி பொருட்கள் மீது தேய்த்து பத்து நிமிடம் ஊற வைத்தப் பிறகு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்தால் பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும். இதுவும் அதே போல தான் கறைகள் அதிகமாக இருப்பின் இன்னும் சிறிது நேரம் ஊற விட்டு தேய்த்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை

வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த பல வழிமுறைகள் இருந்தாலும் இது மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுலபமான வழிமுறையும் கூட. இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் வெள்ளி பாத்திரங்களை இது போல ஒரு முறை சுத்தம் செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -