வாஷிங் மெஷினை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து விட்டால், புதிய வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. உப்பு தண்ணீர் படிந்து, ட்ரம் சுத்துவதில் பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

washing-mechine4
- Advertisement -

இந்த அவசர உலகத்தில் நமக்கு, அன்றாட வாழ்க்கையில் ரொம்பவும் உதவியாக இருக்க கூடிய ஒரு பொருள்தான் இந்த வாஷிங் மெஷின். ஆனால், அதை நாம் பொறுப்பாக பராமரிப்பதே கிடையாது. அந்த வாஷிங் மெஷின் பார்ப்பதற்கே உப்பு கறை படிந்து, அழுக்கோடு இருக்கும். சில பேருடைய வாஷிங்மெஷினில் உள்பக்கம் எல்லாம் கூட உப்புகறை படிந்திருக்கும். வேகமாக மெஷின் சுற்றாது. தண்ணீர் சரியாக வெளியே எடுக்காது. இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு எளிமையான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல ரொம்ப பழையகாத வாஷிங் மெஷின் இருந்தா, அதை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள்.

முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் சோடா உப்பு – 2 டேபிள் ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு தேவையான அளவு, ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பேஸ்ட் பக்குவத்தில் நமக்கு கிடைக்கும். இந்த பேஸ்டை முதலில் வாஷிங்மெஷினில் எல்லா இடங்களிலும் படும்படி பூசி விடுங்கள். 10 லிருந்து 15 நிமிடங்கள் இந்த பேஸ்ட் மிஷினிலேயே நன்றாக ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு ஸ்பாஞ் நாரை வைத்து எல்லா இடங்களிலும் வாஷிங்மெஷினை துடைக்க வேண்டும். அப்போதே மெஷினில் இருக்கும் அழுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க தொடங்கும்‌. அதன் பின்பு ஸ்பாஞ்சை தண்ணீரில் தொட்டு தொட்டு துடைத்துவிட்டு, ஒரு ஈர துணியை போட்டு துடைத்துவிட்டு, அதன் பின்பு காய்ந்த துணியையும் போட்டு வாஷிங் மெஷின் முழுவதும் துடைத்து எடுத்தால் வாஷிங் மெஷின் பளிச் பளிச்சென மாறிவிடும்.

வாஷிங் மெஷினுக்கு உள்ளே அழுக்கு போய் தங்கும் ஒரு இடம் இருக்கும் அல்லவா, அந்தப் பகுதியை கழட்டியும் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்பு வாஷிங்மெஷினுடைய டிரம்மை நாம் சுத்தம் செய்ய வேண்டும். வாஷிங் மெஷின் டிரம்மை சுத்தம் செய்வதற்காகவே, மெஷினில் ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். தண்ணீரை பாதியாக எல்லாம் வைக்க கூடாது. முழுமையாக தான் வைக்க வேண்டும். அதன் பின்பு வாஷிங் மெஷினுக்கு உள்ளே டிரம்மை சுத்தம் செய்யக்கூடிய பவுடர் அல்லது துணி துவைக்கக்கூடிய வாஷிங் பவுடர், வினிகர் – 1/2 கப் சோடா உப்பு – 4 டேபிள் ஸ்பூன், போட்டு விட வேண்டும். இதனுடன் இரண்டு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து விட்டு விட வேண்டும்.

- Advertisement -

இப்படி மேல் சொன்ன பொருட்களை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டு டிரம்மை சுத்தம் செய்தால் அந்த ட்ரம்மில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும். அதில் இருக்கக்கூடிய உப்பு கறைகளை எல்லாம் நீக்கக்கூடிய வேலையை வினிகர் எலுமிச்ச பழச்சாறு சோடா உப்பு பார்த்துக்கொள்ளும். வாஷிங் மெஷினுக்கு உள்பக்கம், படிந்து இருக்கக்கூடிய கடுமையான உப்பு கறைகள் கூட முழுமையாக நீக்குவதற்கு இந்த வழி எளிமையான வழியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எத்தனை தடவை மணி பிளான்ட் வாங்கி வைத்தாலும் வளரவே மாட்டேன் என்கிறதா? அதிர்ஷ்டம் தரும் மணி பிளான்ட் காடு மாதிரி வளர என்ன செய்ய வேண்டும்?

ஒரே ஒரு முறை இந்த முறையில் உங்க ட்ரம்மை சுத்தம் செய்து பாருங்கள். மெதுவாக சுத்தும் வாஷிங் மெஷின் கூட வேகமாக சுற்றும். வாஷிங் மெஷினில் தண்ணீர் வெளியேற்றப்படக்கூடிய இடங்களில் இருக்கும் அடைப்பு எல்லாம் கூட நீங்க விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க வீட்டு வாஷிங்மெஷினை சுத்தம் செய்ய இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -