இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம். இன்று மாலை சிவன் ஆலயத்தில் இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுத்தால் செல்வ செழிப்பு பல மடங்கு பெருகும்.

sivan
- Advertisement -

இன்று பிரதோஷம் என்பதால் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிவரை சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அபிஷேகத்தை பார்த்து, ஈசனை வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். இதில் சில பேர் பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்கு தங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து எடுத்து செல்வார்கள். அந்த பிரசாதத்தை சிவபெருமானுக்கு நிவேதனமாகப் படைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். இது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இதிலும் ஒரு சூட்சம பரிகாரத்தை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வந்திருக்கின்றது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாள். பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று பருப்பு சேர்த்த சமையல் வீட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது துவரம் பருப்பு என்பது மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருளாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இன்று துவரம்பருப்பு சேர்த்து ஏதாவது ஒரு பிரசாதத்தை உங்களுடைய கைகளால் சமைத்து அதை சிவபெருமானுக்கு நிவேதனமாக வையுங்கள்.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் சிவனையும் சக்தியையும் ஒரு சேர மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரதோஷ நேரம் முடிவடைந்த பின்பு இந்த பிரசாதத்தை உங்களுடைய கையால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாகக் கொடுங்கள். இந்த தானம் உங்களுக்கு இருக்கக்கூடிய கடனை குறைக்கும். வருமானத்தை அதிகரிக்கும். உங்கள் குடும்பத்திற்கு மேலும் மேலும் செல்வச் செழிப்பை அள்ளிக்கொடுக்கும்.

உங்களால் முடிந்தால் சுத்தமான சந்தனத்தை வாங்கி இன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக கொடுக்கலாம். மறக்காமல் சிறிது வில்வ இலைகளை வாங்கி உங்கள் கைகளாலேயே அந்த இலையை கட்டி சிவபெருமானுக்கு மாலையாக போடவேண்டும். இன்று அம்பாளை வழிபாடு செய்வதும் மிக மிக சிறப்பு.

- Advertisement -

உங்களால் முடிந்தால் அம்பாளுக்கு மல்லிகைப் பூவை வாங்கி உங்கள் கையாலேயே கட்டி மாலை போடலாம். சிவப்பு நிற குங்குமத்தை சக்தி தேவியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினம் தோறும் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

பிரதோஷ நாளில் உங்கள் வீட்டில் அமர்ந்து அல்லது சிவ ஆலயங்களில் அமர்ந்து ஒரே ஒருமுறை வாயார சிவபுராணத்தை பாடுவது, நமக்கு அத்தனை நன்மையை கொடுக்கும். சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் சிவபெருமானின் பாதத்தை பற்றிக் கொள்ளுங்கள். மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றும் போது உங்களுக்கான பலன் மேலும் இரட்டிப்பாக கிடைக்க அந்த எம்பெருமானே வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -