கோவில் வெண்பொங்கலின் இரகசியம் இதுதான். இந்த 1 பொருளை சேர்த்து வெண்பொங்கல் செய்தால், அச்சு அசல் கோவில் வெண்பொங்கல் சுவை வீட்டிலேயே கிடைக்கும்.

pongal5
- Advertisement -

என்னதான் நம்முடைய வீட்டில் மணக்க மணக்க நெய் விட்டு பொங்கலை சமைத்து சாப்பிட்டாலும், அது கோவிலில் தரும் பிரசாத பொங்கல் போல இருக்காது. எல்லோருக்கும் கோவிலில் இருந்து பிரசாதமாக பொங்கலை வாங்கி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் அல்லவா. கோவில் சுவையில் நம்முடைய வீட்டிலும் பொங்கல் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தக் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை ஒவ்வொன்றாக பின்பற்றி செய்தாலே போதும். சின்ன சின்ன நுணுக்கங்கள் சேர்ந்து உங்களுடைய பொங்கல், கோவில் பொங்கல் போல தயாராகிவிடும்.

பொங்கல் செய்வதற்கு நமக்கு 1 கப் அளவு பச்சரிசி, 1/2 கப் அளவு பாசிப்பருப்பு தேவை. சிலபேர் 3/4 கப் அளவு பாசிப்பருப்பு சேர்த்து பொங்கல் செய்வார்கள். இப்படி செய்தால் பொங்கலில் நிறைய நெய் ஊற்ற வேண்டியதாக இருக்கும். நெய், எண்ணெயை ஊற்ற ஊற்ற பாசிப்பருப்பு இழுத்துக்கொண்டே இருக்கும். 1 கப் அரிசிக்கு, 1/2 கப் பாசிப்பருப்பு போதுமான அளவு.

- Advertisement -

அடுத்தபடியாக கோவில் பொங்கலின் ரகசியத்திற்கு வருவோம். ஒரு மீடியம் சைஸ் பெருங்காய கட்டியை எடுத்து, சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து, நன்றாக கரைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டி பெருங்காய கரைசலின் வாசம் தான் கோவில் பொங்கலின் ரகசியம். இதை பொங்கலில் எந்தெந்த இடத்தில், எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

perungaya-podi

அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். தயாராக இருக்கும் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, பருப்பு சூடாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பருப்பின் நிறம் சிவந்த நிறத்திற்கு மாற கூடாது. பருப்பு சூடானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பச்சரிசியை, பாசிப் பருப்பில் கொட்டி, குக்கரில் இருக்கும் சூட்டில் 30 செகண்ட்ஸ் கலந்துவிட்டு பாசிப் பருப்பையும், அரிசியையும் நன்றாக கழுவி எடுத்து வந்து விடுங்கள்.

- Advertisement -

குக்கரில் கழுவி தயாராக இருக்கும் பச்சரிசியும், பாசிப் பருப்பும் 1 1/2கப் அளவு உள்ளது. இதற்கு 5 கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் அரிசி அளக்கிறீர்களோ, அதே கப்பில் தண்ணீரையும் அளந்து குக்கரில் ஊற்றி விட வேண்டும். குக்கரில் தண்ணீரை ஊற்றிய உடன் பச்சை மிளகாய் – 2, பொங்கலுக்கு தேவையான அளவு – உப்பு, கரைத்து வைத்திருக்கும் பெருங்காய கரைசலில் இருந்து – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு விட வேண்டும். (பச்சை மிளகாய் வாசம் பிடிக்காதவர்கள் இதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

pongal1

அவ்வளவு தான். பொங்கலை வேக வைக்கும் போது மேற்சொன்ன பொருட்களை மட்டும் தான் சேர்க்க வேண்டும். குக்கரை மூடி போட்டு அடுப்பை பற்ற வைத்து விடுங்கள். குக்கரில் ஐந்து விசில் வரட்டும். பிரஷர் அடங்கும் வரை காத்திருந்து அதன் பின்பு குக்கரை திறந்து பார்த்தால், பொங்கல் நல்ல வாசத்துடன் சரியான பக்குவத்தில் வெந்திருக்கும். இது அப்படியே இருக்கட்டும். இதற்கு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

pongal2

ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் மிதமான தீயில் தான் காய வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் மிக மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு – 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

இஞ்சி முழுமையாக வதங்கியவுடன், அடுத்தபடியாக மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன் சேர்த்து பொரிய விட்டு, இறுதியாக தான் முந்திரிப்பருப்பு 10 லிருந்து 15 சேர்த்து முந்திரிப்பருப்பு பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். தாளிப்பு பொருட்களை தீய வைத்துவிடக்கூடாது. பக்குவமாக வறுக்க வேண்டும்.

pongal4

முந்திரி பருப்பு சிவந்த உடனேயே ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். உடனடியாக கரைத்து வைத்திருக்கும் பெருங்காய கரைசலில் இருந்து 1 ஸ்பூன் அளவு பெருங்காயத்தை எடுத்து தாளிப்பு கரண்டியில் ஊற்றி, ஒரு தட்டு போட்டு, தாளிப்பு கரண்டியை மூடி அப்படியே விட்டு விடுங்கள். பெருங்காய தண்ணீரை ஊற்றிய உடன், சிடசிடவென எண்ணெயும் நெய்யும் வெளியே தெறிக்க ஆரம்பிக்கும் அல்லவா. அதற்காகத் தான்.

ven-pongal2

பெருங்காயத் தண்ணீரை ஊற்றி சிடச்சிடப்பு அடங்கியதும், இந்த தலைப்பை எடுத்து அப்படியே பொங்கலில் கொட்டிக் கிளற வேண்டும். இறுதியாக 1 ஸ்பூன் நெய்யை பொங்கலின் மேல் ஊற்றி பரப்பி விட்டு, அப்படியே பரிமாறி பாருங்கள். கோவில் பொங்கலின் ருசி இல்லாமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது.

pongal

பின் குறிப்பு: மேல் சொன்ன அளவுகளில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் நெய்யை உங்கள் இஷ்டம்போல கூடுதலாக குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். கட்டிப் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து, அந்த பெருங்காய கரைகளை பொங்கல் வேக வைக்கும் போதும், தாளிப்பிலும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

- Advertisement -