அருமையான வெண்பூசணி அவியல். ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. வரப்போற வெயில் காலத்துக்கு அடிக்கடி வெண்பூசணியை சமையலில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

aviyal
- Advertisement -

நீர்ச்சத்து நிறைந்த வெண்பூசணிக்காய் அவியல் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக வெறும் 15 நிமிடத்தில் இந்த அவியலை செய்து முடித்து விடலாம். வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்பு, வயிற்று வலி, உடல் சூட்டை தணிக்க இந்த வெண்பூசணி ஒரு சிறந்த மருந்தாக அமையும். வெயில்காலத்தில் வெண்பூசணி மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்து விடுவோமா

250 கிராமில் இருந்து 300 கிராம் வரை உள்ள வெண்பூசணியை தோல் சீவி விட்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் போட்டும் இந்த வெண்பூசணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடாயில் பூசணி காய்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மூடி போட்டு வேக வைத்தும் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். வேகவைத்த வெண்பூசனி நமக்கு தேவை.

- Advertisement -

அடுத்தபடியாக 1 டேபிள்ஸ்பூன் உளுந்தை வெறும் கடாயில் போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், சீரகம் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – 1/4 ஸ்பூன், சிவக்க வறுத்த உளுந்தம்பருப்பு, இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து இதையும் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது குழம்பை தாளித்த விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் தாளித்தால் இதன் சுவை மிக மிக அருமையாக இருக்கும். தேங்காயெண்ணை பிடிக்காதவர்கள் மற்ற எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 1, கருவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து தாளித்து வேக வைத்த வெண்பூசணியே இதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பூசணியை எண்ணெயில் 2 வதக்கு வதக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை வெண்பூசணியுடன் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை அப்படியே பிரட்டி விட வேண்டும். 1/4 கப் அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரை கழுவி கடாயில் உள்ள வெண் பூசணியில் ஊற்றி விடுங்கள். இந்த இடத்தில் தேவையான உப்பு போட்டுக்கொள்ளலாம்.

அதன் பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும். தேங்காய் விழுதை ஊற்றி, ரொம்ப நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. அடுப்பை அணைத்துவிடுங்கள். இறுதியாக 3 டேபிள்ஸ்பூன் அளவு தயிர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, அப்படியே சாப்பிட்டால் இந்த வெண்பூசணி அவியல் அவ்வளவு சுவையாக இருக்கும்.

சாம்பார் சாதம், ரசம் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த அவியல் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -