அட! ஸ்பெஷல் மசாலா பொடியுடன் இப்படியும் கூட வெண்டைக்காய் பொரியலை செய்யலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே!

vendaikai
- Advertisement -

எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல். சாப்பிடுவதற்கே விருப்பம் இருக்காது. ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியலை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும். வெண்டைக்காயை வைத்து வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையில் ஒரு வெண்டைக்காய் ஃப்ரை எப்படி செய்வது என்று இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். சூப்பர் ரெசிபி இது. மிஸ் பண்ணாம ஒரே வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப ஈஸி ரெசிபி.

vendaikai-podimas1

முதலில் வெண்டைக்காய் ஃப்ரைக்கு ஸ்பெஷல் மசாலா எப்படி அரைப்பது தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொட்டுக்கடலை – 50 கிராம், சின்ன வெங்காயம் – 5, வறமிளகாய் – 3, கருவேப்பிலை – 1 கொத்து, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 90% அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடிக்கு 1/2 கிலோ வெண்டைக்காய் சரியான அளவு. அரை கிலோ வெண்டைக்காய்களை நன்றாக கழுவி ஈரத்தை துடைத்து விட்டு பொரியலுக்கு வெட்டுவது போல நைசாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

இப்போது வெண்டைக்காய் ஃப்ரை செய்ய செல்லாமல். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து போட்டு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு, அதன் பின்பு வெண்டைக்காய்க்கு மட்டும் தேவையான உப்பை தூவி வெண்டைக்காயை வதக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக நான்கிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் வெண்டைக்காய் வெந்துவிடும்.

- Advertisement -

வெண்டைக்காய் சுருண்டு வெந்து வந்தவுடன் மிக்ஸியில் பொடி செய்து வைத்திருக்கும் மசாலா பொடியை கடாயில் இருக்கும் வெண்டைக்காயோடு சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி, மசாலா பொருட்களில் இருக்கும் பச்சை வாடை நீங்கியவுடன் சுடச்சுட அப்படியே பரிமாறினால் வெண்டைக்காய் ஃப்ரை ரெடி. சமைக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய் ஃப்ரை இதை விட சுவையாக வேறு யாராலும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு சூப்பர் ரெசிபி இது.

vendaikai-podimas

அரைத்த மசாலாவை கடாயில் இருக்கும் வெண்டைக்காயுடன் சேர்த்து வதக்கும்போது மட்டும் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். காரணம் சின்ன வெங்காயத்தையும் வரமல்லி மற்ற பொருட்களையும் பச்சையாக அறைத்திருக்கிறோம் அல்லவா. மசாலா பொடியின் பச்சை வாடை வெண்டைக்காயில் வரக்கூடாது. அவ்வளவு தான். இந்த வெண்டைக்காய் ஃபிரை, தயிர் சாதம் ரசம் சாதம், சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமானாலும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -