- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெண்டைக்காயில் இப்படி ஒரு பச்சடி ரெசிபியை இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க....

வெண்டைக்காயில் இப்படி ஒரு பச்சடி ரெசிபியை இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க. வித்தியாசமான வெண்டைக்காய் பச்சடி ரெசிபி உங்களுக்காக மட்டும்.

- Advertisement -

பெரும்பாலும் வெண்டைக்காயை வைத்து பொரியல், சாம்பார், குழம்பு தானே வைப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் சூப்பரான வெண்டைக்காய் பச்சடியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த வெண்டைக்காய் பச்சடியை சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் அத்தனை சுவை இருக்கும். தோசை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான். சரி நேரத்தை கடத்த வேண்டாம். ரெசிபிக்கு போகலாம் வாங்க.

vendaikai-podimas1

முதலில் 1/4 கிலோ அளவு வெண்டைக்காய்களை கழுவி தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, பொரியலுக்கு வெட்டுவது போல வெட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த பச்சடிக்கு ஒரு மசாலா பொடி தயார் செய்ய வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து கொள்ளுங்கள். எண்ணெய் –  1 ஸ்பூன், வர மல்லி – 2 ஸ்பூன், வர மிளகாய் – 5, சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு பல் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி – 2 இனுக்கு மட்டும் போதும். இந்த பொருட்களை எல்லாம் வாசம் வரும் வரை வறுத்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.

vendhaikai-gravy2

அடுத்தபடியாக அடுப்பில் அதே கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து வந்தவுடன் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு 3 நிமிடம் போல வதக்கி விட்டு, வெண்டைக்காய்க்கு தேவையான அளவு உப்பு போட்டு, மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு நான்கு துண்டுகளாக வெட்டிய தக்காளிப்பழம் – 1, சேர்த்து இரண்டு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள். தேவைப்பட்டால் மூடி போட்டு தக்காளி நசுங்கும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு, சிறிய துண்டு மிக மிக சிறிய துண்டு – புளியை இதில் போட்டு விட்டு, அந்த சூட்டிலேயே அப்படியே விட்டு விடுங்கள். இந்த வெண்டைக்காய் வதக்கல் நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

இந்த வெண்டைக்காய் பொரியல் நன்றாக ஆறிய பின்பு இதை மிக்ஸி ஜாரில் போட வேண்டும். ஏற்கனவே மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள் உள்ளது அல்லவா, அந்த மசாலா பொருட்களோடு இந்த வெண்டைக்காய் பொரியலை சேர்த்து மிக்ஸியில் 30 செகண்ட் வரை பல்ஸ் மோடில் விட்டு விட்டு ஓட விடுங்கள். வெண்டைக்காய் தக்காளி சேர்ந்து ஒன்றும் இரண்டுமாக துவையல் போல அரை பட்டால் போதும். (மைய அரைத்து விட்டால் கொரகொரப்பாக மாறி விடும் ஜாக்கிரதை.)

vendhaikai-gravy1

அடுப்பில் ஒரு கடாயை மீண்டும் வைத்து எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, தாளித்து இந்த தாளிப்பில் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து, ஒரே ஒரு நிமிடம் சூடு செய்து வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான வெண்டைக்காய் பச்சடி தயார். இதுவரைக்கும் நீங்க இந்த வெண்டைக்காய் பச்சடி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்