இந்த செடி பூக்கவே பூக்காது, இந்த செடி காய்க்கவே காய்க்காது, என்று ஒதுக்கி வைத்த செடியாக இருந்தாலும் கட்டாயம் பூ பூத்து, காய்க்க தொடங்கும். உங்க கையால தயார் செய்த இந்த தண்ணீரை ஊற்றி பாருங்கள்!

kathari1

நம்முடைய வீட்டு தோட்டத்தில் பூக்காமல், காய்க்காமல் செழிப்பாக வளரும் செடிகளை பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். செடி செழிப்பாக வளர்கிறது, ஆனால் பூ விடுவதில்லை, காய்க்கவில்லை. சில சமயங்களில் பூ வைத்தாலும், அந்த பூ, காயாக மாறுவதில்லை. பிஞ்சு காய்கள் செழிப்பாக வளர்வதில்லை. இப்படிப்பட்ட பல பிரச்சினைகள் செடிகளுக்கு உண்டு. கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், எலுமிச்சை, மிளகாய் இதுதவிர நம் வீட்டில் இருக்கும் மற்ற எந்த செடிகளாக இருந்தாலும் சரி, எல்லாவகையான செடிகளுக்குமே, இந்த உரம் அதிகப்படியான ஊட்டச்சத்தை சேர்க்கும் உரமாக இருக்கும். நம் சமையலறையில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த உரத்தை தயாரிக்க போகின்றோம்.

watering-plant

இந்த இயற்கை உரத் தண்ணீரை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை. எந்தெந்த அளவுகளில் தேவை என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தயாரிப்பதற்கு நமக்கு வெந்தயம் 100 கிராம், மண்டை வெல்லம் 300 கிராம் தேவைப்படும்.

முதலில் 100 கிராம் அளவு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு, ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த வெந்தயத்தில் இருக்கும் தண்ணீர் மொத்தத்தையும் வடிகட்டி விட வேண்டும். முடிந்தால் ஒரு காட்டன் துணியின் மேல் ஊறவைத்த வெந்தயத்தை பரவலாகப் போட்டு ஆறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

kathari

அதன்பின்பு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு லேயர் வெந்தயம், ஒரு லேயர் வெல்லம், என்றவாறு போட்டு அடுக்கி வைக்க வேண்டும். இரண்டு இன்ச் அளவு, நீங்கள் ஊற வைத்த வெந்தயத்தை போட்டு கொள்ளுங்கள். மீண்டும், இரண்டு இன்ச் அளவு பொடி செய்த வெல்லம். இவ்வாறு ஒரு அடுக்கு வெந்தயம், ஒரு அடுக்கம் வெல்லம் என்று அடுக்கி வைத்த டப்பாவை மூடி போட்டு 15 நாட்கள் திறக்காமல் வெயில் படாத இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த டப்பாவில் வெல்லம் சேர்த்த வெந்தயம் தானாக தண்ணீர் விட ஆரம்பிக்கும். 15 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு பங்கு இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீருக்கு 15 மடங்கு, நல்ல தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். வாரத்திற்கு 1 முறை 4 வாரங்கள் தொடர்ந்து இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுங்கள்.
மீண்டும் 3 மாதங்கள் கழித்து இதேபோல ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தயாரித்து செடிகளுக்கு ஊற்றலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Vendhayam

15 நாட்கள் வரை மட்டும்தான் இந்த வெள்ளமும் வெந்தயமும் ஊற வேண்டும் என்பது அவசியம் கிடையாது. பாட்டிலில் மீதம் வெந்தயமும், வெல்லம் இருந்தால் கூட, அதை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் ஒரு வாரம் கழித்து கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பிளாஸ்டிக் டப்பாவில் நாம் ஊற வைத்திருக்கும் இந்தக் கரைசல் ஒரு மாதத்திற்கு கூட கெடாமல் அப்படியே இருக்கும். அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு மாதங்கள் வரை, மீண்டும் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. (அதாவது பாட்டிலில் இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைக்கக் கூடாது. வெல்லமும் வெந்தயம் சேர்ந்த டப்பாவை அப்படியே வைத்துவிட வேண்டும். அப்போதுதான் வெந்தயத்தோடு, வெல்லம் ஊறி தண்ணீர் விட ஆரம்பிக்கும்.)

vellam

குறிப்பாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை உங்கள் செடிகள் பூ விடும் தருணத்தில் ஊற்றினால், அந்தப் பூக்கள் உதிராமல் காய் ஆகும். கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பச்சைமிளகாய், பூச்செடிகள் இப்படியாக உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா செடிகளுக்கும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் நல்ல போஷாக்கை கொடுத்து, நன்றாக வளர செய்ய உதவி செய்யும் என்று கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் கூந்தல் இந்த 4 இல் எந்த வகையென்று முதலில் தெரிந்து கொண்டு பின்னர் பராமரிப்பு செய்தால் வேகமாக வளரும்.

இது போன்ற மேலும் பல தோட்டக்கலை சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.