சிக்கு எடுக்க இனி சீப்பு கூட வேண்டாம். வெண்டைக்காய் வைத்து உங்களுடைய தலைமுடியை சிக்கு எடுக்கலாமே? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

hair2
- Advertisement -

இன்னைக்கு நாம பார்க்கப் போறது கொஞ்சம் வித்தியாசமான ஹேர் பேக்.‌ சில பேருக்கு முடி பார்ப்பதற்கு எப்போதும் சிக்கு பிடித்த மாதிரி இருக்கும். தலைக்கு குளித்து வந்த பின்பு முடியை சிக்கு எடுத்து சீவி விடுவதற்குள் போதும் போதும் என ஆகும். கரடுமுரடாக இருக்கும் முடியை கூட வழுவழுப்பாக்க ஒரு வெண்டைக்காய் ஹேர் பேக். வித்தியாசமா இருக்கா? வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

இந்த ஹேர் பேக் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் 5 லிருந்து 7 வெண்டைக்காய், 1/4 கப் அளவு பால், முட்டை – 1, முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பாலை ஊற்றி, பால் பொங்கி வரும்போது, வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய் வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

சூடு ஆறியதும் வெண்டைக்காயையும், பாலையும் அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் மொழுமொழுவென அரைந்து நமக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும். இதை கொஞ்சம் சிரமப்பட்டு வெள்ளை காட்டன் துணியில் போட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது மொழுமொழு ஹேர் பேக் உங்கள் கையில் பச்சை நிறத்தில் இருக்கும். இதோடு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து 1 ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். சூப்பர் ஜெல் பேக் ரெடி

உங்களுடைய முடியில் நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த ஹேர் பேக்கை ஸ்கால்ப்பில் படும் படி முதலில் நன்றாக தடவி மசாஜ் செய்து விட்டு, அதன் பின்பு உங்களுடைய முடியை கீழே நீளவாக்கில் விட்டு சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்து, அப்படியே நீளமாகவே விட்டு விடுங்கள். முடியை இழுத்துக்கொண்டே கட்ட வேண்டாம். இந்த பேக் முடியில் 30 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு நல்லதொரு ஷாம்பு போட்டு நன்றாக வாஷ் செய்து விடுங்கள்.

- Advertisement -

முடியை நன்றாக உலர வையுங்கள். பிறகு பாருங்கள். உங்களுடைய முடி எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். உங்களுடைய முடி ரொம்பவும் பெரிய முடியாக இருந்தால் அதற்கு தகுந்தது போல வெண்டைக்காயின் அளவையும் பாலின் அளவையும் கொஞ்சம் கூட்டிக் கொள்ளுங்கள்.

இவ்வளவு வெண்டைக்காய்க்கு இவ்வளவு பால்தான் ஊற்ற வேண்டும் என்ற அளவுகள் எல்லாம் கிடையாது. வெண்டைக் காய் வேகும்போது தளதளவென பால் இருக்க வேண்டும். பாலில் வெண்டைக்காய் முழுமையாக வேக வேண்டும். அப்போதுதான் அரைபடும் போது நன்றாக அரைபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரத்தில் 2 நாள் இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து வந்தால் உங்களுடைய முடி சில்கியாக மாறும். உங்களுக்கு இந்த பேக் பிடிச்சிருக்கா ட்ரை பண்ணி பாருங்க. இந்த பேக்கை தலையில் போடுவதன் மூலம் முடி உதிர்வும் குறையும். முடி வளர்ச்சியும் அதிகமாகும்.

- Advertisement -