பூக்காத உங்கள் ரோஜா செடி கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்து தள்ள பொட்டாசியம் நிறைந்துள்ள வெந்தயக்கீரையை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

rose-plant-methi-powder
- Advertisement -

மாடி தோட்டம் அல்லது வீடு தோட்டம் அமைத்து வளர்ப்பவர்கள் அதிகம் விரும்புவது ரோஜா செடியை தான். ரோஜா பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க கூடிய அற்புதமான செடியாகும். இதற்கு தேவையான மண் வளமும், உரமும் சரியாக கொடுக்கும் பொழுது ஒரு கிளைகளில் கொத்துக்கொத்தாக பூக்களைக் கொடுக்கும். பெரிய பெரிய அடர்த்தியான நிறங்களை கொண்ட ரோஜா பூக்களை பெறுவதற்கு இந்த வெந்தயக்கீரை உரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்..

கஸ்தூரி மேத்தி எனப்படும் இந்த உலர வைத்த வெந்தயக்கீரை நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. அதில் குறிப்பாக பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் செடிகளின் வளத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தைக் கொடுக்கும். நைட்ரஜன், அயன், கால்சியம் ஆகியவையும் கொண்டுள்ளதால் ரோஜா செடிகளுக்கு ஊட்டச்சத்து மட்டும் கொடுக்காமல், அதன் பெரும்பாலான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இதை அதிக அளவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் வீதம் கொடுத்து வந்தால் கூட செம்மையான ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

வெந்தயத்தை விதைத்தால் வெந்தயக்கீரை சில வாரங்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். அதன் பின்பு அந்த வெந்தயக் கீரையை அறுவடை செய்து அப்படியே வெயிலில் நன்கு உலர்த்தி காய வைத்து பவுடர் ஆக்கி கொண்டால் அது தான் கஸ்தூரி மேத்தி என்று கூறப்படுகிறது. காய்ந்த வெந்தயக்கீரையின் இந்த பொடியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்தால் செடி, கொடிகளுக்கும், சமையலிலும் பயன்படும்

ரோஜா செடி மட்டுமல்லாமல் எல்லா வகையான பூச்செடிகளும் நீங்கள் நட்டு வைத்த ஒரு சில மாதங்களில் கிளைகள் துளிர்த்து, எறும்பு தொல்லை இல்லாமல் இருக்க இந்த வெந்தயக்கீரை உரத்தை தாராளமாக பயன்படுத்தலாம். தோட்டம் என்று ஒன்று வைத்து விட்டால் அதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்றால், அது எறும்பு பிரச்சினையாகத் தான் இருக்கும். நீங்கள் கொடுக்கும் மற்ற உரங்கள் மூலம் எறும்புகள் படை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

- Advertisement -

ஆனால் இந்த வெந்தயக்கீரையில் கசப்பு தன்மை இருப்பதால் ஒரு எறும்பு கூட அந்த பக்கமே எட்டிப் பார்க்காது. வாரம் ஒருமுறையாவது இந்த வெந்தயக்கீரை பவுடரை ஒரு டீஸ்பூன் அளவிற்கு உங்களுடைய ரோஜா செடிக்கு கொடுத்து வந்தால் நல்ல ரிசல்ட் பார்க்கலாம். பொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் பூக்களை மட்டும் அல்லாமல், இலைகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதனால் இலைகள் கறுத்து போகவும் செய்யாது, வாடவும் செய்யாது.

நல்ல பச்சை பசேலென பசுமையான நிறத்தில் இலைகளை துளிர்க்க செய்யும் இந்த வெந்தயக்கீரை உரத்தை நேரடியாக பயன்படுத்த கூடாது. உங்கள் வீட்டு பூச்செடிகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள மண் கலவையில் ஓரமாக ஒரு பக்கத்தை மட்டும் பள்ளம் தோண்டி கொள்ளுங்கள். அதற்குள் ஒரு டீஸ்பூன் வெந்தயக் கீரை பொடியை போட்டு, மண்ணை நன்கு உலர்வாக கைகளை வைத்து கிளறி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது மண்ணுக்கு நல்லதொரு ஆக்சிஜன் கிடைத்து செடிகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

- Advertisement -