வேற லெவல்ல உங்களுடைய முடி வளர்ந்து கொண்டே போகும். வெந்தயத்துடன் இந்த 1 பொருளை மட்டும் சேர்த்து ஹேர் பேக் போடுங்க.

hair8
- Advertisement -

நம்முடைய முடிக்கு வேற லெவல்ல ஒரு ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக தயார் செய்யக் கூடிய இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும். ஒவ்வொரு முடியும் திக்காக வளர, உடையாமல் வளர இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். முடி கொட்டுதுன்னு கவலையே படாதீங்க. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போட்டாலே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

முடி வளர்ச்சியை 2 வாரத்திலோ, 3 வாரத்திலோ நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் முடியை தொட்டுப் பார்க்கும் போது நமக்கு சில வித்தியாசங்கள் தெரியும். முடி சாஃப்ட்டாக பார்ப்பதற்கு பவுன்சியாக திக்காக தெரியும். அது என்ன சூப்பர் ஹேர் பேக் பாக்கலாமா.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கிற்க்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 3. வெந்தயம், வாழைப்பழம், எலுமிச்சை பழச்சாறு. அவ்வளவு தாங்க. வெந்தயத்தை 8 மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள். பழுத்த வாழைப்பழம் 2 எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான வாழைப்பழம் ஆக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரோடு போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு வாழைப்பழத்தை தோல் உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதைப் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை மெல்லிய துணியில் ஊற்றி நன்றாக வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்ட கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

துணியில் ஊற்றி கையை வைத்து நன்றாக பிழியும் போது நமக்கு இந்த பேக் ஃபில்டர் ஆகி கிடைத்துவிடும். இதோடு 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சம்பழச் சாறை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பார்ப்பதற்கு இந்த ஹேர் பேக் அவ்வளவு சாஃப்டாக இருக்கும். உங்களுடைய தலைமுடியில் நன்றாக எண்ணெய் தடவிவிட்டு, இந்த ஹேர் பேக்கை ஸ்கால்ப்பில் படும்படி போட்டு விடுங்கள். அதன் பின்பு முடியின் நுனி பாகம் வரை எல்லா முடியிலும் இந்த ஹேர் பேக்கை தடவி விடுங்கள்.

சரியாக 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விட்டால், முடி பார்ப்பதற்கு அவ்வளவு சாஃப்டா இருக்கும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஹேர் பேக்கை போட்டு வந்தால், மூன்றே மாதத்தில் வேற லெவல்ல உங்க முடி வளர தொடங்கிவிடும். ஆனால் மூன்று மாதத்திற்கு பின்பும் ஹேர் பேக் போடுவதை நிறுத்தி விடக் கூடாது. உங்களுக்கு இந்த ஹேர் பேக் பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -