- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டிய வரம் கிடைக்க துர்க்கை வழிபாடு

வேண்டிய வரம் கிடைக்க துர்க்கை வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை வதம் செய்வதற்காக தான் துர்க்கை அம்மன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்களை தரக்கூடியவர்கள் நம்மை விட்டு விலக வேண்டும் என்றும் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்றும் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வார்கள்.

அப்படி துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்குரிய உகந்த நாளாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. அதிலும் குறிப்பாக ராகு காலத்தில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தும் வேண்டுதல் நிறைவேறவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும். அந்த தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

துர்க்கை வழிபாடு

பொதுவாக துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதிலும் ராகு காலத்தில் நம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவே திகழ்கிறது. பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கும் வெள்ளிக்கிழமை என்பது அம்பிகைக்கு உகந்த கிழமை ஆகும். அதனால் வெள்ளிக்கிழமையில் வரக்கூடியதாக ராகு காலத்திற்கு அதிக பலன் உள்ளது.

வெள்ளிக்கிழமை வரக்கூடிய ராகு காலமான 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு முழு கொப்பரை தேங்காயை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அந்த கொப்பரை தேங்காயின் நடுவில் ஒரு சிறிய ஓட்டையை போட்டு அதற்குள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்று கூறக்கூடிய ஆமணக்கு எண்ணெயை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் சிவப்பு நிற திரியை போட்டு துர்க்கை அம்மனுக்கு முன்பாக தீபம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்த பிறகு துர்க்கை சாலிசா, மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் அல்லது துர்க்கை காயத்ரி மந்திரத்தை 108 முறை கூறலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது துர்க்கை அம்மனுக்கு நெய்வேத்தியமாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்வது இன்னும் அதீத பலனை தரும். இப்படி நாம் வழிபாடு செய்து முடித்த பிறகு பிரசாதங்களை கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:தரித்திரம் நீங்க விநாயகர் விளக்கு

இப்படி நாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துர்க்கை அம்மனை மனதார நினைத்துக் கொண்டு இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் துர்க்கை அம்மனின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்