இறைவனின் முன்பு இந்த 2 பொருட்களை சேர்த்து வைத்து, என்ன வரம் வேண்டும் என்றாலும் கேளுங்கள். உடனே வேண்டுதல் பலிக்கும்.

pray

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்துமே பலிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய பிரார்த்தனை. ஆனால் இறைவனுக்கு நன்றாகவே தெரியும். நமக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று! எப்போதுமே இறைவனிடம் இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்காமல் ‘என் வாழ்க்கைக்கு எது நன்மையோ அதை ஆசீர்வாதமாக கொடுத்தால் போதும்’ என்றபடி இறைவனிடம் வேண்டிக் கொண்டாலே போதும். நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம். அந்த இறைவனுக்கு தெரியாதா, நமக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று!

praying-god1

சரி, என்னதான் சொன்னாலும் மனிதர்களுடைய மனது வேண்டுதல் இல்லாமல் இறைவழிபாட்டை செய்யாது. நாம் வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்க, வேண்டும் என்றால் இறைவனின் முன்பு எந்தெந்த பொருட்களை வைத்து வணங்க வேண்டும். கட்டாயமாக இறைவழிபாடு என்றால் அதில் தீபவழிபாடு, தூப வழிபாடு அவசியம் தேவை. இறுதியாக கற்பூர ஆரத்தி இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். நிச்சயமாக தினம் ஒரு நிவேதனத்தை நம் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து வழிபாடு செய்வது நல்லது.

இதோடு சேர்த்து நம் எல்லோரது வீட்டிலும் பஞ்சபாத்திரம் என்ற ஒன்று இருக்கும். அதில் கட்டாயமாக நிரம்ப தண்ணீரை வைத்து தான் இறைவனுக்கு பூஜை செய்வோம். இந்த பஞ்ச பாத்திரம் அல்லாமல் வேறு ஒரு செம்பு சொம்பு இருந்தாலும் சரி, அல்லது பித்தளை சொம்பு இருந்தாலும் சரி, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி வீட்டில் எதுவுமே இல்லாதவர்கள் கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்.

thulasi-theertham

அந்த கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, துளசி இலைகள் கொஞ்சம், குங்குமப்பூ ஒரு சிட்டிகை, இந்த 2 பொருட்களையும் சேர்த்து கலந்து இறைவனின் முன்பு வைத்து விடுங்கள். இப்படியாக இந்த ஒரு டம்ளர் தண்ணீரில், இரண்டு பொருட்களை சேர்த்து வைத்துவிட்டு, இறைவனிடம் உங்களுடைய வேண்டுதலை கேளுங்கள். நீங்கள் இறைவனிடம் வைத்த வேண்டுதல் இறைவனின் செவிகளுக்கு நேராகப் போய் கேட்கும் அளவிற்கு சக்தி கொண்ட தீர்த்தம் தான் இது.

- Advertisement -

அந்த கண்ணாடி டம்ளரின் மீது உங்களது வலது கையை வைத்து மூடிக் கொண்டு, உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொன்னால், அந்த தண்ணீர் உங்களுடைய வேண்டுதலை நேராக பிரபஞ்சத்திடம் கொண்டு பொய் சொல்லும். நீங்கள் வைத்த வேண்டுதல் நிச்சயம் கூடிய விரைவில் நிறைவேறும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நீங்கள் செய்ய வேண்டிய முயற்சிகளை தினமும் செய்து கொண்டே வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த முயற்சிகளுக்கு கடவுள் துணை இருப்பார். என்னதான் இறைவனிடம் வேண்டுதல் வைத்தாலும், அந்த வேண்டுதல் பலிப்பதற்கு நம்முடைய முயற்சியும் அவசியமாக இருக்கவேண்டும். இறைவனே இறங்கி வந்து நமக்காக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

kungumapoo

துளசி என்பது புனிதத்துவம் வாய்ந்த ஒரு பொருள். இதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தால் நம்முடைய வேண்டுதல் அந்த இறைவனின் செவிகளில் விழுந்துவிடும். குங்குமப் பூவுக்கு எதையும் ஈர்க்கக்கூடிய சக்தி என்பது அதிகமாகவே உள்ளது. உங்களுடைய வேண்டுதல்களை அதிவிரைவாக இறைவனிடம் ஈர்த்துக் கொண்டு சேர்க்கும் தன்மை இதற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

pray

பூஜை முடித்தவுடன் இந்தத் தண்ணீரை நீங்கள் பருகி விடலாம். வீட்டில் மூலைமுடுக்குகளில் தெளித்து விடலாம். சில விஷயங்கள் சிலருக்கு எப்போதுமே விளையாட்டாக தெரியும். விளையாட்டாக செய்யக்கூடிய ஒரு விஷயம் படிக்கும் போதுதான், அதனுள் எத்தனை சக்தி அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்வோம். இந்த பரிகாரமும் அப்படித்தான். விளையாட்டுத்தனம் இல்லாமல் நம்பிக்கையோடு ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன். உங்களுடைய வேண்டுதல்கள் நல்லபடியாக பலிக்கும் பட்சத்தில் நீண்டநாள் கனவு நிறைவேறினால் அது சந்தோஷம் தானே! நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.