வேண்டுதல் நிறைவேற கிருஷ்ணர் வழிபாடு

krishnar valipadu
- Advertisement -

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வங்களில் முதலிடம் பிடிக்க கூடியவர் கிருஷ்ண பகவான். கிருஷ்ணா என்று கூப்பிட்டதும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடோடி வந்து நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய வல்லமை படைத்தவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட கிருஷ்ணரை எந்த முறையில் வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் சித்தரித்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவோம். பல வருடங்களாக கிருஷ்ணரும் வீட்டிற்குள் வந்து தனக்கு பிடித்தமான உணவு பொருட்களை உண்டு மகிழ்கிறார் என்பது நம்பிக்கையாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட கிருஷ்ணரை வேண்டுதல் நிறைவேறுவதற்கு வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு கிருஷ்ணரின் படம் தேவைப்படும். அந்த படத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுவது போலவும், பசுமாடுகள் இருப்பது போலவும் இருக்க வேண்டும். அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு புதிதாக வெண்ணையும் ஒரே ஒரு மயில் இறகும் தேவைப்படும். இவை இரண்டையும் புதிதாக தான் வாங்க வேண்டுமே தவிர ஏற்கனவே இருந்த பொருட்களை உபயோகப்படுத்த கூடாது.

மயில் இறகு சிறிய அளவில் இருந்தால் போதும். இந்த வழிபாட்டை புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தொடங்க வேண்டும். தொடர்ந்து எட்டு தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மாலை 6:30 மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒரு நீல நிறத்திலான பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை எழுதிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எதிர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் நேர்மறை வார்த்தைகளை மட்டுமே உபயோகப்படுத்தி ஒரே ஒரு வேண்டுதலை எழுதி அந்த பேப்பரை மயில் இறகின் குச்சியில் சுற்ற வேண்டும். அது கலராத வண்ணம் அதற்கு மேல் நீல நிறத்திலான ரப்பர் பேண்ட் அல்லது நூலை வைத்து கட்டி விட வேண்டும். அடுத்ததாக கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை வைத்துவிட்டு, மயிலிறகை கையில் வைத்துக்கொண்டு வேண்டுதல் என்னவோ அதை மனதார வேண்ட வேண்டும்.

பிறகு அந்த மயிலிறகை கிருஷ்ணரின் பாதத்தில் படுமாறு வைத்துவிட்டு “ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து எட்டு நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். மயிலிறகை பூஜையின் ஆரம்பத்தில் மட்டும் கையில் வைத்து வேண்டினால் போதும் மற்ற நாட்களில் கையில் எடுக்காமல் கிருஷ்ணரின் பாதத்திலேயே இருக்கட்டும்.

- Advertisement -

ஒன்பதாவது நாள் எப்போதும் போல் பூஜை செய்துவிட்டு தூபதீப ஆராதனை காட்டி மந்திரத்தை உச்சரித்த பிறகு அந்த மயிலிறகை எடுத்து அதில் இருக்கும் பேப்பரை தனியாக எடுத்து வைத்துவிட்டு மயிலிறகை படுத்து உறங்கும் தலையணைக்குள் வைத்து விட வேண்டும். எப்பொழுது வேண்டுதல் நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த மயிலிறகை எடுத்து பீரோவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார நிலை உயர சொல்ல வேண்டிய பதிகம்

முழு நம்பிக்கையுடன் கிருஷ்ண பகவானை நினைத்து இப்படி வேண்டுதலை வைத்து மனதார வழிபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -