வேண்டுதல் நிறைவேற சிவ வழிபாடு

siva valipadu
- Advertisement -

ஆசை இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை எடுப்போம். அந்த முயற்சிகள் நிறைவேறாத பட்சத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைப்போம். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருந்தால் கண்டிப்பாக முறையில் அதை இறைவன் நமக்கு நிறைவேற்றுவதற்கு நல்ல வழியை காட்டுவார். அந்த வகையில் சிவபெருமானை எந்த நாளில் சென்று எப்படி வழிபட்டால் நம்முடைய நியாயமான வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இறைவழிபாட்டில் பலரும் செய்யக்கூடிய ஒன்று தங்களுடைய வேண்டுதலை முன் வைப்பது. வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடைபெற வேண்டும் என்று வேண்டுதலை வைப்போம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும், தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரவும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக என்று பல வேண்டுதல்களை நாம் இறைவனிடம் வைப்பது உண்டு. அப்படி இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது எந்த நாளில் எப்படி வைத்தால் நிறைவேறும் என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சிவபெருமானுக்கு உகந்தனாக நாளாக பிரதோஷ நாள் திகழ்கிறது. இந்த பிரதோஷ தினத்தன்று நாம் விரதம் இருந்து சிவபெருமானை வழிப்பட்டோம் என்றால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் அதாவது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பலரும் அறிந்த உண்மையே. இந்தப் பிரதோஷம் ஆனது மாதத்திற்கு இரண்டு நாட்கள் என்ற வீதம் வரும். இதை நாம் மாத பிரதோஷம் என்று கூறுவோம்.

இதை தவிர்த்து நித்திய பிரதோஷம் என்று இருக்கிறது. அதாவது தினமும் மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் இருக்கும் நேரத்தை தான் நாம் நித்திய பிரதோஷம் என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் சிவபெருமானை நாம் வழிபடுவது மிகவும் சிறப்பு. இந்த நேரத்தில் மட்டும் எதையும் சாப்பிடாமல் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்புக்குரியது.

- Advertisement -

ரோகிணி நட்சத்திர நாள் அன்று நித்ய பிரதோஷ வேளையில் அதாவது மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். கண்டிப்பான முறை இந்த நேரத்தில் ரோகினி நட்சத்திரம் இருக்க வேண்டும். அதை பார்த்துக்கொண்டு செல்ல வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று சிவபெருமானுக்கு வழங்கி சிவபெருமானை வழிபட வேண்டும்.

பிறகு நந்தி பகவானிடம் வந்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று அமைதியாக அமர்ந்து சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை 108 முறை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும். பிறகு உங்களுடைய நியாயமான வேண்டுதல் என்னவோ ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 15 நாட்களில் கடன் அடைய பரிகாரம்

இந்த முறையில் ரோகிணி நட்சத்திர நாளன்று மாலை நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டு கோரிக்கை வைத்தால் கண்டிப்பான முறையில் அந்த கோரிக்கை நிறைவேறும்.

- Advertisement -