வேண்டுதல் நிறைவேற வாராஹி வழிபாடு

varahi
- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் மனதிற்குள் நிறைந்திருக்கும். அந்த எண்ணம் ஈடேற வேண்டும் என்று நாம் பல முயற்சிகளை செய்வோம். அந்த முயற்சிகளை செய்யும்பொழுது கடவுளையும் நம் முறையாக வணங்குவதன் மூலம் கடவுளின் அருளால் அந்த முயற்சிகள் வெற்றியடைந்து நம்முடைய எண்ணங்கள் ஈடேறும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் நினைத்தது நடக்க வேண்டுதல் நிறைவேற வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமை என்று வழிபடும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் வாராகி அம்மன். மிகவும் அற்புதமான சக்திகள் நிறைந்த வித்யாசமான ஒரு கோலத்தில் திகழக்கூடியவள் தான் வாராகித் தாய். இவளை மனதார நினைத்து யார் ஒருவர் வணங்குகிறார்களோ அவர்களின் குலத்தையே காத்து ரட்சிக்கும் ஆற்றல் மிக்க தெய்வமாக இந்த தெய்வம் விளங்குகிறது. இந்த தெய்வத்திற்கு மிகவும் உகந்த திதியாக பஞ்சமி திதி இருந்தாலும் வெள்ளிக்கிழமை அன்று நாம் எந்த முறையில் வாராகி தாயை வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வராகி அம்மனுக்கு இரவு நேர வழிபாடு மிகவும் உகந்த நேரம் என்பதால் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வாராகி அம்மனை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை 8 மணியில் இருந்து 9 மணி என்பது சுக்கிர பகவானுக்கு உரிய கோரையாக கருதப்படுவதால் இந்த வழிபாட்டை நாம் செய்யும்பொழுது நம்முடைய பண தேவைகளும் பூர்த்தியடையும் என்பது கூடுதலான ஒன்று.

முதலில் வாராகி அம்மனின் புகைப்படம் அல்லது சிலை இருந்தால் அதை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதோடு வாராகி அம்மனுக்கு என்று தனியாக ஒரு அகலில் நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைக்க வேண்டும். அந்த விளக்கையும் பூக்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வாராகி அம்மனுக்கு பிடித்தமான நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு கிழங்கு வகையை வைக்கலாம். அவ்வாறு இயலாதவர்கள் பாலை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

இப்பொழுது சதுரமாக ஒரு சிவப்பு நிற துணியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து ஏலக்காயை வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய வலது கையில் வைத்து மூடிக்கொண்டு அதன் மேல் இடது கையை வைத்து கிழக்கு பார்த்தவாறு அமர வேண்டும். பிறகு “ஓம் ஸ்ரீம் வாராகி தாயே போற்றி” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறிய பிறகு நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் சென்று அந்த அறையில் நின்று வலது புறமாக ஏழு முறை சுற்ற வேண்டும்.

இப்படி அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றிய பிறகு பூஜையறைக்கு வந்து வாராகித் தாயின் முன்பாக ஏலக்காய் வைத்திருக்கும் இந்த துணியை சிவப்பு நிற நூலால் கட்டி யார் கண்ணிற்கும் படாத அளவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். 21 நாட்கள் கழித்து இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும். ஓடுகின்ற நீர் இல்லாத பட்சத்தில் அரச மரம் ஆலமரம் வேப்ப மரம், மருதாணி மரம் இருக்கும் இடங்களில் அந்த மரத்திற்கு அடியில் சிறிதாக பள்ளம் எடுத்து அதில் இந்த மூட்டியை வைத்து மூடிவிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தெய்வங்களை வணங்குவதில் இருக்கும் சூட்சம முறை

இப்படி நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் வாராகித் தாய் நாம் நினைத்ததை நினைத்தபடி நமக்கு நடத்திக் காட்டுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -