தெய்வங்களை வணங்குவதில் இருக்கும் சூட்சம முறை

god
- Advertisement -

ஆண் தெய்வங்களான பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில், இப்படிப்பட்ட கோவில்களுக்கும் செல்கின்றோம். பெண் தெய்வங்களான அம்பாள் கோவில்களுக்கும் செல்கின்றோம். இப்படி ஆண் தெய்வங்களுக்கு என்று சில கோவில்கள் இருக்கிறது. பெண் தெய்வங்களுக்கு என்று சில கோவில்கள் இருக்கிறது.

ஆண் தெய்வங்கள் உள்ள கோவிலுக்கு சென்றால் அந்த தெய்வத்தை எப்படி வணங்கனும். பெண் தெய்வம் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்றால் அந்த தெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரியுமா உங்களுக்கு. ஆண் தெய்வத்தை எப்படி வணங்குவது பெண் தெய்வத்தை எப்படி வணங்குவது? ஆன்மீகம் சார்ந்த அறிய தகவல் உங்களுக்காக.

- Advertisement -

இது மட்டும் அல்லாமல் கோவிலுக்கு சென்றால் அங்கே இருக்கும் சிலைகளை நாம் தொட்டு வழிபாடு செய்வது சரியா தவறா என்ற கேள்விக்கு உண்டான பதிலும் இந்த பதிவின் இறுதியில் உங்களுக்காக.

தெய்வங்களை வணங்கும் முறை

ஆலயங்களில் இருக்கும் ஆண் தெய்வங்களை வழிபாடு செய்யும்போது, முதலில் அவர்களுடைய பாதத்தை பாருங்கள். பாதத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே உங்களுடைய பார்வையை மேலே உயர்த்தி ஆண் தெய்வத்தின் முகத்தை தரிசனம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

அதுவே ஆலயங்களில் இருக்கும் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதாக இருந்தால் பெண் தெய்வத்தின் முகத்தை முதலில் தரிசனம் செய்துவிட்டு, அதன் பிறகு அவர்களுடைய பாதங்களை தரிசனம் செய்வது சிறப்பான பலனை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த முறையில் கோவிலுக்கு சென்று தெய்வங்களை வணங்கி, வைக்க கூடிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை. இனிவரும் கால கட்டத்தில் கோவிலுக்கு சென்றால் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கோவில் சிலைகளை தொட்டு வழிபாடு செய்யலாமா

நிறைய பேருக்கு இப்போது இருக்கக்கூடிய பழக்கம் என்னவென்றால் கோவில்களில் இருக்கும் சிலையை, தலையை தொட்டு வணங்குவது, பாதங்களை தொட்டு வணங்குவது, அந்த கோவில் சிலைக்கு மேலே இருக்கக்கூடிய பூக்களை அவர்களே எடுப்பது, அவர்களை சிலையை தொட்டு பூவை வைப்பது போன்ற விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் இப்படி எல்லாம் செய்யக்கூடாது.

- Advertisement -

சில பேர் சாமியின் நெற்றியில் வைத்திருக்க குங்குமத்தை தொட்டு எடுத்து தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். இதுவும் செய்யக்கூடாது தவறு. கோவிலுக்கு சென்றால் அந்த சிலையை தொடாமல் வழிபாடு செய்வதே சரியான முறை என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பணத்தை சேர்க்கும் பணப்பெட்டி ரகசியம்

இதுநாள் வரை நீங்கள் சிலையை தொட்டு வழிபாடு செய்திருந்தாலும் இனிமே அந்த தவறை செய்யாதீர்கள். ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த சின்ன சின்ன எளிமையான குறிப்புகள் உங்களுக்கு பயன் உள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -