இந்த 5 பொருட்களை இறைவனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து வேண்டிக் கொண்டாலே போதும். பெண்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.

god1

பொதுவாகவே வேண்டுதல் என்பது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும். அதற்காக ஆண்கள் இறைவழிபாடு செய்ய மாட்டார்கள். கடவுளிடம் வேண்டுதல் வைக்க மாட்டார்கள் என்று சொல்லவர வில்லை. இருப்பினும், ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. பெண்கள் எப்போதுமே தனக்காக வேண்டிக் கொள்வதை விட, தன் குடும்பத்திற்காக, தன் கணவருக்காக, தன் குழந்தைகளுக்காக வேண்டுதலை வைத்துக்கொள்வார்கள். பெண்களுக்கான வேண்டுதல் நிறைவேற வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடக்க பெண்கள் எப்படி கோவில்களுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pray

பெண்களுடைய வாழ்க்கையில்  மங்கலத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் என்றால் அதில் ஏராளமான பொருள்கள் அடங்கும். மஞ்சள் குங்குமம் சந்தனம் வஸ்திரம் எலுமிச்சம் பழம் வெற்றிலை பாக்கு பூக்கள் இவைகள் அனைத்துமே அடங்கும். இப்படி மங்களகரமான பொருட்களை இறைவனின் பாதங்களில் வைத்து வேண்டுதல் வைக்கும்போதும் அந்த வேண்டுதல் உடனடியாக பலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு தாம்பூலத் தட்டில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ரவிக்கை துணி பூ இந்த பொருட்களை ஒன்றாக வைத்து கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தத் தாம்பூலத் தட்டை குருக்களிடம் கொடுத்து இறைவனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து தர சொல்லும்படி கேட்டால் போதும். அவர் நீங்கள் வாங்கிக் கொடுத்த இந்த பொருட்களை எல்லாம் இறைவனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து கொடுத்து விடுவார். கோவிலில் இறைவனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்தா இந்த பொருட்களை நம் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

praying god

மங்கலத்தை உண்டாக்கக்கூடிய அந்தப் பொருட்களை இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்ததால், அதனுடைய சக்தி இன்னும் இரட்டிப்பாக இருக்கும். பெண்கள் தங்களுடைய வீட்டில் தினசரி பயன்பாட்டிற்காக கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட அந்த பொருட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனின் பாதங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். மஞ்சளை தினம்தோறும் முகத்தில் பூசிக் கொள்ளலாம். வஸ்திரத்தை தைத்து ஆடையாக அணிந்து கொள்ளலாம். வெற்றிலை பாக்கை சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம். இல்லையென்றால் பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.

இப்படியாக இறைவனின் பாதங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருட்களை தினம் தினம் நாம் வீட்டில் பயன்படுத்தும் போது நம்மை அறியாமலேயே நம்மைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் உருவாக்கி, நம் வீட்டிற்கும் நம் குடும்பத்திற்கும் பல நன்மைகள் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும். குடும்ப பிரச்சனையால் பெண்களுக்கு மனகஷ்டம் ஏற்படாது. மன நிம்மதி நிலவும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதில் ஏதேனும் தடையாக இருந்தால் அந்த தடைகள் கூட தகர்த்தெறிய ப்படும்.

kungumam

மாதம் ஒருமுறை கோவிலில் அர்ச்சனை செய்து ஒரு பொருளை நாம் வீட்டிற்கு கொண்டுவந்து பயன்படுத்தினால் அது நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். மேல் சொன்ன பொருட்களை மட்டும் தான் கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எலுமிச்சம்பழம், சில்லரை காசுகள், தங்க நாணயம் வெள்ளி நாணயம், இப்படி மங்கலத்தை உண்டாக்கக்கூடிய எந்த சக்தி வாய்ந்த பொருட்களை வேண்டுமென்றாலும் இறைவனின் பாதங்களில் வைத்துவிட்டு, உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களும் இந்த வழிபாட்டு முறையை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.