- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய மந்திரம்

வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாள். இந்த நாளில் யார் ஒருவர் முருகப்பெருமானை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இது முருகப்பெருமானே அவரை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு கொடுத்த வரமாக இருக்கிறது. அதனால் தான் பலரும் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பான முறையில் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கிருத்திகை நட்சத்திர நாளில் கூறவேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒரு விரத நாளாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் வீட்டிலேயே முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது பலரும் வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ முருகப்பெருமானின் கவசங்களை படித்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை கூறுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் முருகப் பெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான மந்திரங்கள் உதவி செய்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். அதிலும் அந்த மந்திரத்தை எத்தனை முறை கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதை பொருத்தும் அதன் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளானது ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது என்பதால் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த நாள் நமக்கு பெரிதும் துணை புரியும். இந்த நாளில் நாம் விரதம் இருக்கிறோமோ இல்லையோ வழிபாடு செய்கிறோமோ இல்லையோ தீபம் ஏற்றுகிறோமோ இல்லையோ இந்த ஒரு மந்திரத்தை மட்டும் ஆறு முறை கூறினால் போதும்.

அதிலும் குறிப்பாக காலையில் எழுந்ததும் எந்தவித ஆகாரத்தையும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் வயிற்றில் கூறுவது தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் எழுந்ததும் முகம் கை கால்களை மட்டும் கழுவி விட்டு வடக்கு திசை பார்த்து அமர்ந்து கொண்டு முருகப் பெருமானை மனதார நினைத்து “ஓம் கதிர்வேலாய நமஹ” என்னும் மந்திரத்தை ஆறு முறை மட்டும் கூறினால் போதும். முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிடும். பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை மனதார நினைத்து அது நடந்து விட்டதாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: காரிய தடை நீங்க முருகர் வழிபாடு

எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் வெறும் வயிற்றில் கூறுபவர்களுக்கு முருகனின் அருளால் அவர்கள் நினைத்தது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்