இப்ப தக்காளி விக்கிற விலைக்கு தக்காளியை சேர்க்காமல் வெங்காயம் வைத்து செய்ற இந்த கார பச்சடிய தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா டிபன் சாப்பாடு என எல்லாத்துக்கும் சமாளிச்சு விடலாம்.

- Advertisement -

இட்லி தோசைக்கு விதவிதமான சட்னி வகைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதே போல துவையல் வகைகளையும் கேள்விப்பட்டு இருப்போம். இது என்ன வித்தியாசமான வெங்காய கார பச்சடி என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழலாம். இந்த வெங்காய கார பச்சடி தக்காளியே சேர்க்காமல் ரொம்ப வித்தியாசமான முறையில் செய்யலாம். அது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இதற்கு பெரிய வெங்காயமாக இருந்தால் நான்கு வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்வதாக இருந்தால் 200 கிராம் வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு முழு பூண்டையும் தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம், பூண்டு ஒரு கொத்து கருவேப்பிலை கொஞ்சமாக புளி சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு கைப்பிடி அளவு பிரஷ் ஆன கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் சேர்த்து அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து விட்டு கொத்தமல்லி மிளகாய்த் தூள் இவற்றின் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் பல்ஸ் மோடில் ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொரகொரப்பாக இந்த பச்சடி அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரிலே இதை அரைக்க வேண்டும். அதே நேரத்தில் மைய அரைக்க கூடாது.

- Advertisement -

இப்போது அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றிய பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நிறம் மாறிய பிறகு ஒரே ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பிறகு கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த தாளிப்பை ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கார பச்சடியில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இதை டிபன் வகை அனைத்துடனும் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி சுட சுட சாதத்துடன் இதை வைத்து சாப்பிடும் போது இன்னுமே பிரமாதமாக இருக்கும் இந்த வித்தியாசமான வெங்காய பச்சடி ரெசிபி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -