ஒரே ஒரு வெங்காயமும், இரண்டே நிமிஷமும் , இருந்த போதும் சூப்பரா காரசாரமான சட்னி பண்ணிடலாம். அப்புறம் என்ன டெய்லி உங்க வீட்ல இந்த சட்னி தானே. இனி சமைக்க டைம் இல்லைன்னு சொல்லவே முடியாது.

- Advertisement -

காலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சமையலறைக்குள் நுழைந்தால் இரண்டு கைகள் பத்தாது. அந்த அளவிற்கு வேலைகள் குவிந்து கிடக்கும். காலை டிபன், மதியம் சாப்பாடு, குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்று தனித்தனியாக பார்த்து பார்த்து செய்து விட்டு கிளம்புவதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். அதே போல மாலையும் வீடு வந்ததும் ஏதாவது சிம்பிளா செய்து முடிக்கிற மாதிரி ஏதாவது சேமித்து விடலாம் என்று தோன்றும். எது போன்ற சமயங்களில் எந்த அளவுக்கு முடியுமோ அவ்வளவு சிம்பிளாக அதே நேரத்தில் நல்ல ஒரு உணவை சமாளிக்க முடிந்தால் அவர்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கும் அப்படி ஒரு சிம்பிள் ரெசிபி தான் இந்த காரச் சட்னி. அதிக பொருட்கள் சேர்க்காமல் அதிக நேரம் எடுக்காமல் ரெண்டே நிமிடத்தில் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பரான இந்த காரச் சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காரச் சட்னிக்கு தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அள,வு காஷ்மீரி மிளகாய் தூள்- 2 ஸ்பூன், வெல்லம் தூள் – 2 ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த சட்னி செய்வதற்கு வெங்காயத்தை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் புளி, வெல்லம், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள் திப்பிகள் இருக்கக் கூடாது.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிந்த உடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பிறகு கறிவேப்பிலை போட்டவுடன் பெருங்காயமும் சேர்த்த பிறகு அரைத்து வைத்து சட்னியை இதில் ஊற்றி கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விட வேண்டியது தான் சுவையான வெங்காய காரச் சட்னி ரெடி.

- Advertisement -

இந்த சட்னியை தாளிக்க கூட வேண்டாம் அப்படியே கூட சாப்பிடலாம். சிலருக்கு வெங்காயத்தின் பச்சை வடை பிடிக்காது என்று நினைப்பவர்கள் தாளித்து சாப்பிடலாம்.

இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என அனைத்து வகை டிபன்களுக்கும் இந்த காரச் சட்னி நல்ல ஒரு காம்பினேஷன். இந்த சிம்பிள் சட்னி ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -