தக்காளி வெங்காயம் கார சட்னி இந்த அளவுகளில் செஞ்சி பாருங்க காரசாரமா ஹோட்டலில் கொடுப்பது போலவே இருக்கும்

onion-tomato-chutney
- Advertisement -

தக்காளி வெங்காயம் கார சட்னி | Onion tomato kara chutney

தக்காளி கார சட்னி, வெங்காய கார சட்னி எல்லாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் தக்காளியும், வெங்காயமும் சேர்த்து செய்யும் பொழுது அதன் ருசி அபாரமானதாக இருக்கும். கூடுதலாக இந்த அளவுகளில் இந்தெந்த பொருட்களை சேர்த்து செய்யும் பொழுது அதனுடைய ருசி ஹோட்டல் சுவையை மிஞ்சியதாக இருக்கப் போகிறது. ‘தக்காளி, வெங்காயம் கார சட்னி’ ரொம்ப சுலபமாக டேஸ்ட்டியாக அரைப்பது எப்படி? என்று தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 10, பூண்டு – நான்கு பற்கள், பெரிய வெங்காயம் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பழுத்த தக்காளி பழங்கள் – மூன்று, ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கிய மல்லித்தழை மற்றும் கருவேப்பிலை இலைகள். தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

தக்காளியும், வெங்காயமும் சேர்த்து செய்யப்படும் இந்த கார சட்னி ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கும். இதற்கு முதலில் தேவையான அளவிற்கு வெங்காயம் மற்றும் தக்காளி பழங்களை நன்கு தோல் உரித்து சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய பெரிய துண்டுகளாகவும் நறுக்கி வைக்கலாம். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் மேற்கூறிய அளவின்படி உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பருப்பு வகைகள் வறுபட்டதும் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். நான்கு பூண்டு பற்கள் உடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் சீக்கிரம் வதங்க சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து வதக்குங்கள். புளி சேர்த்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களையும் சேர்த்து மசிய வதக்க விடுங்கள். வெங்காயம் தக்காளி மசிய வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லித்தழை மற்றும் கருவேப்பிலை இலைகளை சம அளவில் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
30 நிமிடம் ஊற வைத்து அரைத்தால் போதும் உடனே மொறுமொறுன்னு ஹோட்டல் தோசை போலவே ஆரோக்கியமான பாசிப்பருப்பு தோசை இப்படி கூட செய்யலாமே!

ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பின்னர் இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் கடுகு, உளுந்து போட்டு தாளித்து, பொன்னிறமாக வறுத்து ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலையை ஒரு கொத்து போட்டு சட சடவென பொரிந்து வந்ததும் சட்னியில் சேர்த்து கிளற வேண்டியதுதான். ரொம்ப டேஸ்ட்டியாக ஹோட்டலில் கொடுக்கும் கார சட்னியை விட இந்த கார சட்னி ரெசிபி ருசி மிகுந்ததாக இருக்கும், இப்படியே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -