30 நிமிடம் ஊற வைத்து அரைத்தால் போதும் உடனே மொறுமொறுன்னு ஹோட்டல் தோசை போலவே ஆரோக்கியமான பாசிப்பருப்பு தோசை இப்படி கூட செய்யலாமே!

pasi-paruppu-dosai_tamil
- Advertisement -

பாசிப்பருப்பு தோசை | Pasi paruppu dosai recipe in Tamil

பலவிதமான தோசை வகைகளில் பாசிப்பருப்பு தோசையும் ஒன்று! ரொம்பவே சுவையான மற்றும் ஆரோக்கியம் மிகுந்த இந்த பாசிப்பருப்பு தோசை செய்வதும் சுலபம்தான். குறைந்த நிமிடத்திலேயே அரைத்து சட்டுனு இன்ஸ்டன்ட் ஆக செய்யக்கூடிய வகையில் இந்த தோசை இருக்கிறது மேலும் சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டுமென்று கேட்கத் தூண்டும் சுவையில் இருக்கக்கூடிய இந்த பாசி பருப்பு தோசை ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு, ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன், தண்ணீர் – அரை கப், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை விளக்கம்

பாசிப்பருப்பு ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 30 நிமிடம் நன்கு பருப்பு ஊறி வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாசிப்பருப்பை சேர்த்து அதனுடன் காரத்திற்கு தேவையான அளவிற்கு மிளகாய் சேர்க்க வேண்டும். இரண்டிலிருந்து மூன்று பச்சை மிளகாய்கள் உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல காம்பு நீக்கி துண்டுகளாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இப்போது கால் கப் மட்டும் தண்ணீர் ஊற்றி மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபைன் பேஸ்டாக நைசாக அரைத்து எடுத்த இந்த மாவை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும் எனவே தேவைப்பட்டால் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை உடனே இன்ஸ்டன்ட் ஆக நீங்கள் தோசை சுட்டு சாப்பிடலாம் எனவே தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றிக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பை மீடியமான ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒன்றரை கரண்டி மாவை எடுத்து மெல்லிதாக வரும்படி தோசை கல் முழுவதுமாக பரப்பி விடுங்கள். பிறகு சுற்றிலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நெய் அல்லது எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெயிலும் இல்லாமல், செலவும் இல்லாமல் ஒரே பொருளை வைத்து 100 அப்பளம் வரை ரெடி பண்ணிடலாம் தெரியுமா?. வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.

நன்கு சிவக்க ஹோட்டலில் கொடுக்கும் மொறு மொறுன்னு தோசை போலவே வெந்து வரும். அதன் பிறகு நீங்கள் மறுபடியும் திருப்பி போட வேண்டிய அவசியம் இல்லை, அப்படியே ஹோட்டலில் கொடுப்பது போலவே சுருட்டி எடுத்துக் கொடுக்கலாம். ரொம்ப சுவையானதாக இருக்கக்கூடிய இந்த ஆரோக்கியம் மிகுந்த பாசிப்பருப்பு தோசை மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியாக செம்ம டேஸ்ட்டில் இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி உங்க வீட்டில் பாசிப்பருப்பு தோசை நிச்சயம் இருக்கும்.

- Advertisement -