திடீரென இந்த நோய் வருவதற்கு என்ன காரணம்? இந்நோயிலிருந்து நிவாரணம் காண செய்ய வேண்டிய முக்கியமான தானம் என்ன?

ven-pongal-perumal
- Advertisement -

திடீரென தான் எல்லா நோய்களும் வருகிறது ஆனால் ஒவ்வொரு நோயும் வருவதற்கு பின்னாலும் பல காரணங்கள் இருக்கும். சில நோய்கள் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில் இந்த நோயும் அப்படித்தான். யாருக்கு வரும்? எதற்கு வரும்? என்று தெரியாது. ஆனால் வந்தால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விடும். அப்படியான இந்த நோயிலிருந்து நிவாரணம் காண ஆன்மீகம் செய்ய சொல்லும் தானம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நன்றாக இருப்பவர்கள் திடீரென இந்த நோய்க்கு ஆட்படுவார்கள். இந்த நோய் பெரும்பாலும் வயது வித்தியாசம் இன்றி இப்பொழுது எல்லோரையும் ஆட்டிப்படைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அப்படியான ஒரு நோய் தான் இதய நோய்! இதயம் திடீரென வலியை உணரும். உயிர் பிழைப்போமா? மாட்டோமா? என்றே தெரியாத நிலை நமக்கு ஏற்படும். நன்றாக இருந்தவர் திடீரென இதய நோயால் பாதிக்கப்படுகிறது எதனால்?

- Advertisement -

நமக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் கர்மா அடங்கியுள்ளது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தான் பலன்களும் கிடைக்கும். நல்லதை நினைத்தால் நல்லதும், கெட்டதை நினைத்தால் கெட்டதும் தான் நடக்கும். நல்ல மனிதர் தான் ஆனாலும் நோய்கள் வருகிறது எதனால்? என்று கேட்கலாம். என்றோ எப்பொழுதோ செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த வினைகள் யாவும் நம்மை பின் தொடர்கின்றன.

இந்த கர்மவினையிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள நிறைய தான, தர்மங்களை, புண்ணியங்களை செய்ய வேண்டும். புண்ணிய காரியங்களை அதிகமாக செய்யும் பொழுது நமக்கு வரக்கூடிய கெடுதல்கள் பாதியாக குறையும். இருக்கின்றவன் இல்லாதவனுக்கு கொடுப்பதுதான் தானம் ஆகும். இந்த கைங்கரியத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பணம் படைத்தவர்களும், குணம் படைத்தவர்களும் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதய நோய்கள் உள்ளவர்கள், இதயத்தில் அடைப்பு, வலி, ஓட்டை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வெண் பொங்கலை தானம் செய்தால் இந்த நோயிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆன்மீகம் கூறுகிறது. அந்த வகையில் உங்களுக்கு விருப்பப்பட்ட எந்த கோவிலுக்கும் சென்று நீங்கள் இந்த தானத்தை செய்து வரலாம். உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயராலேயே நீங்கள் இந்த தானத்தை செய்வது மிக சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
வியாழக்கிழமையில் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்தால் பிடித்த வேலை நல்ல சம்பளத்துடன் உங்களைத் தேடி வருவது உறுதி.

பெருமாள் பக்தர்கள் ஏகாதசி அல்லது சனிக்கிழமைகளில் வெண் பொங்கலை பக்தர்களுக்கு தானம் செய்யலாம். ஒரு கிலோ வெண்பொங்கல் சுடச்சுட தயார் செய்து அதில் மிளகு, சீரகத்தை தூக்கலாக போட்டு தானம் செய்ய வேண்டும். மிளகும், சீரகமும் நம் உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடியது எனவே இந்த வெண் பொங்கலை சிவ பக்தர்கள் பிரதோஷம் அன்றும், முருக பக்தர்கள் சஷ்டி அன்றும், விநாயகர் பக்தர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்றும், அம்மன் பக்தர்கள் வெள்ளிக்கிழமை அன்றும் தானம் செய்யலாம். இப்படி ஒவ்வொரு நபர்களுடைய இஷ்ட தெய்வத்தின் முக்கிய தினங்களின் பொழுது தானம் செய்வது சிறப்பு! மேலும் இவர்கள் காலையில் செய்வதைவிட சாயங்காலம் செய்வது நல்லது. அருகில் இருக்கும் உங்கள் இஷ்ட கோவிலுக்கு சென்று தெய்வத்தை வணங்கி வேண்டிக் கொண்டு, வெண்மையாக இருக்கக்கூடிய இந்த வெண்பொங்கலை பக்தர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம் தீராத நோயெல்லாம் தீருமாம்.

- Advertisement -