ஒரு கைப்பிடி வெந்தயம் இவ்வளவு வேலைகளை செய்யுமா? தலை முதல் கால் வரை வெந்தயத்தை இப்படியும் பயன்படுத்துங்கள்!

venthayam-face-hair-pack
- Advertisement -

வெந்தயத்தை ஒரு மிகச்சிறந்த மூலிகை பொருளாகவும் கொள்ளலாம். சமையலுக்கு பயன்படுத்தும் இந்த வெந்தயம் ஆரோக்கியம், முக அழகு போன்றவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயம் குளிர்ச்சி மிக்க ஒரு பொருள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான் ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் நம் முகத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி கிளன்சிங் செய்யவும் பயன்படும். இப்படி வெந்தயத்தை பற்றி தெரியாத தகவல்களையும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயன்படும் விதம் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும், உடல் உஷ்ணம் காணாமல் போய்விடும். உடல் உஷ்ணம் காரணமாக நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாக கூடும். உஷ்ணம் தணிய ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் வெந்தயத்தையும் சேர்த்து பருகினால் வயிறு குளிர்ந்து உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணம் தீர்ந்து உச்சந்தலையில் உதிர்ந்து கொண்டிருக்கும் முடி பிரச்சனையைக் கூட சரி செய்துவிடும். வயிறு தொடர்பான அத்தனை பிரச்சனைகளையும் இது நீக்கும்.

- Advertisement -

வெந்தயம், அதுமட்டுமல்லாமல் தலை முடியின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க வல்லது. கொஞ்சம் வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதை தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் தலைக்கு அலசிப் பாருங்கள். கண்டிஷனர் போடாமலேயே தலைமுடி நல்ல நறுமணத்துடன், சிக்குகள் இன்றி அலைபாயத் தொடங்கும்.

வெந்தயம் எளிதில் கிடைக்கக் கூடியது என்பதால் அதை தாராளமாக எல்லோருமே பயன்படுத்த முடியும். ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவிக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரினால் அலசினால் வெயிலினால் வரக்கூடிய சரும பாதிப்புகள் அத்தனையும் நீங்கும். கருமையான நிறம் மறைந்து, நல்ல ஒரு பொலிவு கிடைக்கும். வெந்தயம் குளிர்ச்சி என்பதால் சுவாச பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும் எனவே சுவாச பிரச்சனைகள் இருப்போர் ஜாக்கிரதையாக கையாளுவது நல்லது.

- Advertisement -

வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே பவுடராக அரைத்த வெந்தயத்தூள் உடன், பால் சேர்த்து 15 நிமிடம் முகம் முழுவதும் மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் துளைகள் விரிந்து அதிலிருக்கும் அடைப்புகள் அனைத்தும் நீங்கி, முகம் அழுக்குகள் இன்றி பளிச்சென மின்னும். சிலருக்கு மூக்கு ஓரங்களில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கும். அது போல இருப்பவர்கள் இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பாருங்கள், நாளடைவில் பொலிவு கிடைக்கும்.

வெந்தய பொடியுடன் பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகம் முழுவதும் அடர்த்தியாக தடவி நன்கு ஈரப்பதம் இல்லாமல் உலரவிட்டு, குளிர்ந்த நீரினால் அலம்பினால் கருப்பாக இருப்பவர்கள் கூட நல்ல நிறம் கிடைத்து வெள்ளையாக தெரிவார்கள். வெந்தய பொடியுடன் தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வர முகப் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். புதிதாக பருக்களும் முளைக்காது. தினமும் வெந்தயத்தை ஒரு டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடித்து விடுங்கள். இதனால் வயிற்றிலிருக்கும் உஷ்ணம் நீங்கி அஜீரண கோளாறுகள், வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாக்கலாம். வெந்தயத்தை விதைத்து வைத்தால் சில நாட்களிலேயே முளைத்து விடும். இந்த வெந்தயக் கீரையும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது எனவே ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் இவ்வளவு விஷயங்களையும் நாம் செய்து விடலாம்.

- Advertisement -