வேர்க்கடலை தோலை வைத்து வீட்டு குறிப்பு

verkadalai
- Advertisement -

பெரும்பாலும் வேர்க்கடலையை சாப்பிட்டு விட்டு அந்த தோலை தூக்கி குப்பையில் தான் போடுவோம். குப்பையில் போடும் வேர்க்கடலை தோலை வைத்து, ஒரு புத்தம் புதிய வீட்டு குறிப்பை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த குறிப்புக்கு நமக்கு காய்ந்த வேர்க்கடலை தோல் தேவை.

வேகவைத்த வேர்க்கடலை தோலாக இருந்தால் அதை சேகரித்து, சிறிது நேரம் வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

வேர்க்கடலை தோல் வீட்டு குறிப்பு

பொதுவாகவே மாலை நேரத்தில் வீட்டில் இந்த சின்ன சின்ன கொசுக்களின் தொல்லை, சின்ன சின்ன வண்டு, பறக்கும் பூச்சிகளின் தொல்லை இருக்கும். அது மட்டும் இல்லாமல் மழைக்காலத்தில் வீட்டை சுற்றி நிற்கும் தண்ணீரால் வீட்டுக்குள் துர்நாற்றம் வீசும். இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரு ஐடியாவை தான் இந்த வேர்கடலை தோலை வைத்து பார்க்கப் போகின்றோம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ந்த வேர்க்கடலை தோல்கள் 1 கைப்பிடி அளவு போட்டு, அதில் கிராம்பு 2 போட்டு, மிக்ஸி ஜாரில் இரண்டு ஓட்டு ஓட்டங்கள். கொரகொரப்பாக ஒரு பொடி உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த துகள்கள் கிராம்பு வாசனை நிறைந்த துகள்களாக இருக்கும். இப்போது இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சின்ன தேவைப்படாத சில்வர் கிண்ணம் அல்லது சாம்பிராணி தூபம் போடும் தூபக்கால் ஏதாவது ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை தோல்களை 1 கைப்பிடி அளவு போடுங்கள். இதோடு வெங்காயத்தோல், பூண்டு தோல், எதாவது இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சின்ன கட்டி கற்பூரத்தை நசுக்கி இதன் மேலே தூவி, கொளுத்தி விடுங்கள். கிண்ணத்தில் இருக்கும் பொருட்களில் நெருப்பு பிடித்து லேசாக புகை வர தொடங்கும். இதில் வேர்கடலை தோலை தூள் செய்து போட்டு இருக்கின்றோம். அதில் கிராம்பின் வாசனையும் நமக்கு நிறைவாக இருக்கும். இதிலிருந்து வெளிவரும் புகை வீட்டில் இருக்கும் சின்ன சின்ன கொசுக்கள் பூச்சிகளை விரட்டி அடிக்கும். இந்த வாசத்திற்கு வீட்டிற்குள் கொசுக்கலோ பூச்சிகளோ நுழையாது.

இதையும் படிக்கலாமே: வண்ணக் கோல பொடிகளை தயாரிப்பது எப்படி?

6 மணிக்கு இந்த புகையை போட்டு விடுங்கள். அது மட்டுமல்லாமல் பூண்டு தோலில் இருந்து வெளிவரும் புகையில் இருக்கக்கூடிய வாசம் சளி பிரச்சனையை சரி செய்யும். கிரம்பில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் நம்முடைய மன அழுத்தத்தை குறைக்கும். நல்ல நறுமணம் இருக்கும். இந்த புகை போடும் இடத்தில் எதிர்மறை ஆற்றலும் தாங்காது. வீடு பாசிட்டிவ் எனர்ஜியோடு இருக்கும். இத்தனை நன்மைகளும் கொண்ட புகை போடும் இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -