வேரோடு கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனையை, ஒரே இரவில் நிறுத்த வேண்டுமா? முடி கொட்டுவதை உடனே நிறுத்தக்கூடிய பவர் இந்த ஒரு எண்ணெக்கு தான் இருக்குது.

hair26
- Advertisement -

வேர் கால்களில் வலு இல்லாத காரணத்தினால் தான் முடி அதிகமாக உதிர்கின்றது. அந்த வேர்க்கால்களை வலுவாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கு நாம் ஒரு வலிமைமிக்க எண்ணெயை வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். வேர்க்கால்களுக்கு சத்து ஊட்டும் வகையில் ஒரு எண்ணெயை நம் வீட்டில் எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய அழகு குறிப்பு தான் இது. இந்த எண்ணெயை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் வலுவிழந்த உங்களுடைய வேர்கால்கள் நன்றாக வலுபெறும். முடி ஊட்டச்சத்தோடு வளரும். முடி உதிர்வு உடனடியாக குறையும். ஸ்கால்ப்பில் முடி வளராத இடத்தில் எல்லாம் கூட, முடி வளர்ச்சியை தூண்டும். வாங்க முடிக்கு ஊட்டச்சத்து தரும் அந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து தர எண்ணெய் தயார் செய்யும் முறை:
இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 250ml, பாதாம் 10, பூசணி விதை 1 ஸ்பூன், கிராம்பு 5, காய்ந்த ரோஸ்மேரி இலைகள் 1 ஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம், பூசணி விதை, கிராம்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு இரண்டு ஓட்டு ஓட்டினால் அது கொரகொரப்பாக அரைபட்டு நமக்கு கிடைத்துவிடும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதை அப்படியே அடுப்பில் வையுங்கள். ஸ்டவை சிம்மில் வைத்து விடுங்கள். எண்ணெய் லேசாக சூடாக தொடங்கும் போதே மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த பொடியும், எடுத்து வைத்திருக்கும் ரோஸ்மேரி இலைகளையும் எண்ணெயில் போட்டு விட வேண்டும். எண்ணெய் ரொம்பவும் காய்ந்த பிறகு இந்த பொடியை போட்டால் உடனடியாக கருகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாம் பொடியாக அரைத்து வைத்த இந்த கலவையை எண்ணெயில் போட்ட பிறகும் கூட அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும். எண்ணெய் லேசாக கொதித்து, நிறம் மாறி வந்த உடனேயே  அடுப்பை அணைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் அந்த எண்ணெய் அப்படியே நன்றாக ஆரட்டும். பிறகு ஒரு காட்டன் துணியில் அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தினமும் உங்களுடைய தலைக்கு வைக்கலாம். எப்போதும் போல தேங்காய் எண்ணெய் எப்படி வைப்பீங்க. அப்படி வச்சுக்கோங்க. அப்படி இல்லை என்றால் ஒரு காட்டன் பஞ்சில் இந்த எண்ணெயை நனைத்து உங்கள் முடியை பாகமாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து விரல்களை வைத்து லேசாக மசாஜ் செய்து விட்டால் இன்னும் இன்னும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே, செம்பருத்தி பூவை வைத்து நம் தலை முடிக்கு தேவையான ஷாம்புவை தயார் செய்யலாமே. ஒரு சொட்டு கெமிக்கல் கூட சேர்க்காமல்.

வேர்க்கால்கள் தினம் தினம் வலுபெரும். தினம் தினம் வளரக்கூடிய உங்கள் முடி ஸ்ட்ராங்காக இருக்கும். கொட்டவே கொட்டாது. பாத்துக்கோங்க, இந்த பவர்ஃபுல்லான எண்ணெய் உங்கள் அடர்த்தியான முடி வளர்ச்சி கனவை நிச்சயம் நினைவாக்கும். தேவை என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -