எனை வெறுக்கும் இதய தேவதை – காதல் கவிதை

Love kavithai

நீ என்னை வெறுக்கும் அளவிற்கு
நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை..
ஆனால் நீ என்னை
வெறுக்கிறாய் என்பதை அறிந்தும் நான் உன்னை
நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..

Kadhal kavithai Image
Kadhal kavithai Image

என் நெஞ்சில் ஈரம் உள்ளவரை
நீ என் நெஞ்சோடு தான் இருப்பாய்..
நீ என்னை வெறுத்தாலும் சரி
ஒதுக்கினாலும் சரி..
நீயே என் இதய தேவதை..
உன் முகமே எனக்கு புதிய தாமரை..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
வாலிப தென்றலாய் எனை வருடிய காதல் கவிதை

பல நேரங்களில் காதலர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள் வருவதுண்டு. அப்படி வரும் சண்டைகள் பெரிதாகி பிரியும் அளவிற்கு கூட செல்வதுண்டு. ஆனால் அவர்களின் காதல் அவர்களை பிரியவிடாது. மாறாக அவர்களின் காதலை அந்த சண்டை மேலும் மெருகேற்றும். ஒரு புது விதமான புரிதலை தரும். அப்படி சண்டை இட்டு தவித்துக்கொண்டிருக்கும் காதலர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

காதல் கவிதைகள், அம்மா கவிதைகள், காதல் தத்துவங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.