அட! 5 பிரெட் துண்டு இருந்தால் இவ்வளவு சுவையான காலை உணவை சமைக்க முடியுமா? வாருங்கள் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்

bread-roll
- Advertisement -

ஒரு சில நேரங்களில் தூங்கி எழுந்தவுடன் காலை உணவை சமைப்பதற்கு சற்று சோம்பேறி தனமாகவே இருக்கும். அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் சமைப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். எனவே வீட்டில் இருக்கும் சில பிரட் துண்டுகளை வைத்து எளிமையாக செய்ய சில உணவுகள் இருக்கின்றன. அதிலும் மிகவும் அதிக சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சற்று மொறு மொறுவென இருக்கும் சுவையான ஒரு உணவைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாக தான் செலவாகும். இதில் சேர்க்க வேண்டிய பொருட்களும் குறைவாகத்தான் தேவைப்படும்.

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 5, முட்டை – 1, சர்க்கரை – ஒரு ஸ்பூன், ஜாம் – 5 ஸ்பூன், சோளமாவு – 2 ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், பால் – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஐந்து பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றின் ஓரங்களை மட்டும் நறுக்கி தனியாக எடுத்து விட வேண்டும். அதன்பின் பூரி கட்டையை வைத்து பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக அழுத்தி தேய்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் இவை உருட்டுவதற்கு சரியான பதத்தில் இருக்கும்.

பிறகு பிரட் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் ஏதாவது ஒரு சுவையில் இருக்கும் ஜாம் எடுத்து ஒவ்வொரு ஸ்பூனாக பிரட் மீது தடவி வைக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் 2 ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த கலவையில் சிறிதளவு கட்டிகள் கூட இல்லாமல் நன்றாக கலக்கிவிட வேண்டும். பின்னர் ஜாம் தடவிய பிரெட்டை ஒவ்வொன்றையும் சுருள் வடிவில் உருட்டி வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு ஒவ்வொரு பிரட் சுருள்களையும் எடுத்து முட்டைக் கலவையில் நனைத்து, பேனில் வைத்து பொரிக்க வேண்டும். ஒவ்வொரு புறமும் சிவந்து வந்ததும் மற்றொரு புறம் திருப்பி போட்டு, நன்றாக பொரிய விட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரட்டையும் இதேபோல் பொரித்தெடுக்க வேண்டும். இதனை அனைவருக்கும் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். இதன் சுவையில் அனைவரும் விருப்பமாக மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இவ்வளவு ஈஸியான காலை உணவை நீங்களும் உடனே ட்ரை செய்து பாருங்கள்.

- Advertisement -